அடுத்து, சீன பண்பாடு நிகழ்ச்சி பற்றிய சில கருத்துக்கள்.
--பாய் இன மக்கள் கொண்டாடும் தீப்பந்த திருவிழா பற்றியும், இத்திருவிழா தோன்றிய கதையைப் பற்றியும், விளக்கமாக அறிந்தேன். அத்தோடு கிளிஞ்சலை விரும்பும் இனத்தைப் பற்ரியும் கூறி, சீனப் பண்பாடு நிகழ்ச்சியை பெருகூட்டினார் என்கிறார் பூண்டி, K.குப்புசாமி.
--சாங்மிங் நகரத்தைப்பற்றியும் அது, சுத்தமான காற்று நகரமாக உள்ளதையும், அதின் கிழக்கு பகுதியில் 20 வகை தோட்டங்கள் இருப்பதையும் கேட்ட போது என் நெஞ்சு பூரித்துப் போனது. இது போன்ற உள்ளங்கள் பூமியில், அபூர்வமாகத்தான் வாய்க்கும் என்றார் புதுவை N.பாலகுமார்.
--சீனப் பண்பாட்டை விளக்கும் வகையில், நாடக வடிவில் வழங்க போதிய முன்முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் பரசலூர், எஸ்.உத்தமசீரன்.
அண்மையில், இலங்கை நேயர்கள் அதிகமான கடிதங்களை அனுப்பிவருகின்றனர். அவர்களின் கருத்துக்களை கேட்டோமா?
--எனக்கு பிடித்தமான நிகழ்ச்சி நேருக்கு நேர் நிகழ்ச்சியே!பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு இடங்களிலிருந்தும் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக ஆசைப்படுகின்றேன் என்கிறார், இலங்கை R.M. நலீப்.
--உங்களது ஒலிபரப்பு எனக்குப் பயனுடையதாக இருக்கிறது. பல தகவல்களை அறிந்து கொள்கின்றேன். சீனா பற்றிய பல தகவல்களை உங்கள் வானொலி ஒலிபரப்பின் மூலம் கேட்டறிகிறேன். நேயர் நேரம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது என்றார் இலங்கை, ACM.நவாஸ்.
--தமிழ் மொழியை பரப்பவேண்டும் என்ற உங்கள் உயர்ந்த நோக்கம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. உங்களது வானொலி நிலையத்தின் மூலம், சீன நாட்டைப் பற்றியும், அதன் கலை, கலாச்சாரப் பண்புகளைப் பற்றியும் தெளிவாக அறிய முடிகிறது என்கிறார் இலங்கை, M.சஜாத். 1 2
|