அடுத்து, செய்முறை.
முதலில் வெள்ளரியை நன்றாகச் சுத்தம் செய்து, துண்டு போட்டுக் கொள்ளவும். பிறகு, பூண்டு, உப்பு ஆகியவற்றுடன் சேர்த்துக் கலந்து 20 நிமிடம் வைத்திருக்கவும்.
அதன் பிறகு, சர்க்கரை, சிவப்பு மிளகாய், இனிகர் ஆகியவற்றுடன் வெள்ளரித் துண்டுகளை நன்றாகக் கலக்கவும். ஐந்து மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். அதன் பிறகு, வெள்ளரி கிச்சடி தயார். அதாவது வெள்ளரி சாலட் தயார்!
மிகச் சுவையானது. தனியாகவே உண்ணலாம்.
தட்டில் பரிமாறும் போது, சிவப்பு மிளகாய், பச்சை வெள்ளரித் துண்டு என, வண்ணக் கலவையும் கண்ணைப் பறிக்கும்.
கோடைக்காலத்துக்கு ஏற்ற, சிக்கனமான சீன உணவு இப்போது உங்கள் வீட்டுக்கே வந்து விட்டது. தயாரித்து ருசிக்கத் தவறாதீர்கள். 1 2
|