• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-10 14:37:18    
நேயர்களின் கருத்துக்கள் 09

cri
இவ்வாண்டின் இசை நிகழ்ச்சியில், சில மாற்றங்கள் ஏற்பட்டன. பல நேயர்களுக்கு இது பிடிக்கிறது.

--விஜயலட்சுமி வழங்கிய நல்ல நாள் மற்றும் சிறந்த ஆண்டு என்ற பாடல்கள் செவிக்கு இனிமையாக இருந்தன. இனி, இசை நிகழ்ச்சிகளில் இரு சீனப்பாடல்களும் இரு தமிழ்ப் பாடல்களும் ஒலிப்பரப்பினால் நன்றாக இருக்கும் என்கிறார் பரசலூர் P.S.சேகர்.

--இசை நிகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தேன். சீனப் பாடல்கள் அருமையாக இருந்தன். உஙகள் மொழி தெரிந்து இருந்தால் பாடல்கள் வரியையும் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்கிறார் செஞ்சி, P.வின்சென்ட்.

யூனான் மாநிலம் பற்றிய இன்ப பயணம் நிகழ்ச்சி பல நேயர்களைக் கவர்ந்துள்ளது.

--இந்நிகழ்ச்சியில், யூனான் மாநிலம் பற்றி கூறக் கேட்டேன். குங்கு இயற்கை வளம் தொழிப்பதை சீனப் பயணம் மேற்கொண்ட டார்டர் சிவக்குமார் எங்களிடம் மிக ஆவலுடன் எடுத்துக்கூறினார். அவர் அங்கு கண்டதை எங்களிடம் ஒப்பிட்டுவிவரித்தார். அருமையான சுற்றுலா இடம் இது. நேயர்களின் ஆவலைத் தூண்டிய மலர்விழிக்கு பாராட்டுக்கள் என்கிறார் விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்.

--யூனான் மாநிலத்தின் சிற்றுண்டி பற்றி, அறிந்து கொண்டேன். சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியில் சுவையும் ஆறாத தன்மையும் கொண்ட இரண்டு நாள் வேக வைக்கக்கூடிய ஒரு சிற்றுண்டியைப் பற்றி சூடாக சுவையாகச் சொன்ன சகோதரி மலர்விழிக்கு பாராட்டுக்கள் என்கிறார் S.நாட்டாமங்கலம், A.மாதுராஜ்.

--இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. தன் கணவரின் உடல் மெலிந்து போவதைக் கருத்தில் கொண்டு, சத்து மிக்க கோழி சூப். அதனுடன் கால்வகைகளை சேர்ந்து கொடுத்த பெண்மணியின் கதையும் நன்றாக இருந்தது. இந்த சிற்றுண்டி மீது, எங்களுக்கும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது என்கிறார் ஆலங்கநேரி, எஸ்.குமரன்.

1  2