இவ்வாண்டு, தமிழ் செல்வம், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை வழங்குகின்றார். புதிய பாட நூலை இயற்றியுள்ளார். இந்நிகழ்ச்சி மூலம், நேயர்கள் பலர் சீன மொழியை கற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றோம்.
--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது. மருத்துவமனை பற்றிய சீன சொற்றொடர்களைத் தெரிந்து கொண்டோம். சீன மொழியை கற்றுக்கொள்ள நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார் ஆலம்பாக்கம், P.நடராஜன்.
--இந்நிகழ்ச்சி, சீன மொழி பற்றி அறியக் கூடியதாகவும் எமது மொழியாற்றலை வளர்த்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது என்கிறார் இலங்கை, A.L.M.அனீஸ்.
--என்றைக்காவது சீனா வந்து, சீன வானொலியை பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை, அது கண்டிப்பாக நிறைவேறும் என்கிறார் உத்திரக்குடி, எஸ்.கலைவாணன் ராதிகா.
--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி மிக எளிமையாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளது. பத்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான பிறகு, என்னால், தாங்களுடன் சீன மொழியில் பேச முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்கிறார் பாண்டமங்கலம், எம்.தியாகராஜன். 1 2
|