நேயர்களே, சீன பண்பாடு நிகழ்ச்சி மூலம், சீனாவின் பாரம்பரிய பண்பாடு, வரலாறு ஆகியவை பற்றி புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?
--வெண்ணெயால் உருவாக்கப்பட்ட சிலைகள் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்ட போது, உண்மையில் எனக்கு வியப்பாகத் தான் இருந்தது. வெயிலில் உருகாத சிலை தயாரிக்க வேண்டும் எனில், அதற்கு மிகுந்த திறமை வேண்டும். பண்டைய சீனர்களின் தொழில்நுட்பத்திறனை இது நன்கு எடுத்துக்காட்டுகின்றது என்கிறார் வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.
--சீன பண்பாடு நிகழ்ச்சியினை சுவைபட ரசித்தோம். இதில், சீன பத்தாண்டின் போது கொண்டாடப்படும் வசந்த காலத்தில் வெண்ணை உருவச்சிலையை உருவாக்கி கொண்டாடப்படுவதின் எண்ணத்தையும் சிறப்பையும் அறிந்து கொண்டோம் என்கிறார் கைத்தறி நகர், J.D.மணிகண்டன்.
--சீன தேசிய இன மக்களின் வாழ்க்கை நிலை, பொருளாதார நிலை ஆகியவற்றையும், பண்பாடு மற்றும் கலாச்சார நிலைமைகளையும் அறிய தருகின்றீர்கள், பாராட்டுக்கள் என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.
தற்போது, மேன்மேலும் அதிகமான இலங்கை நேயர்கள் கடிதம் அனுப்பிவருகின்றனர். அவர்களின் கருத்துக்களை கேட்போமா?
--நேயர் கடிதம் நேயர் நேரம் உங்கள் குரல் ஆகியவற்றை நான் விரும்பிக் கேட்கின்றேன். கட்டுரைகளையும் வேறு நிகழ்ச்சிகளையும் கேட்டு ரசிக்கின்றேன் என்கிறார், M.முகமது முபாஸ்.
--தங்களின் தமிழ் இணைய தளம் செயல்படத் துவங்கியிருப்பது அறிந்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றேன் என்கிறார் M.M.தஜீஹா.
--உங்களது நிகழ்ச்சியானது, மாணவர் சமூதாயத்திற்கும் இளைஞர் சமூதாயத்திற்கும் பயன்மிக்கதாக அமையும் என நம்புகின்றேன். உங்களது நிகழ்ச்சிகளை நானும் எனது குடும்பத்தினரும் விரும்பிக் கேட்டு வருகின்றோம் என்கிறார் M.M.M.ஹம்தி.
--சீன வானொலி, இலங்கையிலும் அதிகமான நேயர்களை கவர்ந்து வருகிறது. மேலும் மேலும் புதிய நிகழ்ச்சிகளை தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்கிறார் A.L.M.பிர்தான்ஸ்.
--ஒலி இதழில் உருளை பச்சை மிளகாய் வறுவல் செய்முறை கண்டேன். வாசிக்கும் போதே, உண்பது போல இருந்தது. தயாரித்து, உண்டேன், மிகவும்சுவையாக இருந்தது. சீன உணவின் ரகசியம் விளங்கியது என்கிறார் M.A.ஸஹான். 1 2
|