• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-13 17:00:09    
ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்

cri

ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்திய நாளான 12ந் நாளன்று ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி விழா கோலம் மென்மேலும் அதிகரித்துள்ளது. பல்வேறு வீடுகளின் வாசலில் கிரேக்க தேசிய கொடி தொங்கவிடப்பட்டது. மக்கள் மகவும் மகிழ்ச்சியுடன் போட்டியின் துவக்க விழாவை எதிர்பார்க்கிறார்கள். 2008 பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு கமிட்டி 12ந் நாள் ஏதென்ஸில் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி திட்டப்படி சீராக நடைபெற்றுவருகின்றது. மக்கள் மிகவும் அக்கறை கொண்ட, விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானம் 2007ஆம் ஆண்டு முழுமையாக நிறைவடையும் என்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பெய்சிங் அமைப்புக் கமிட்டித் துணைத் தலைவர் லியு சிங்மின் தெரிவித்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 116வது முழு அமர்வு கூட்டம் 12ந் நாள் நிறைவடைந்தது. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 2006 துலிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக் கமிட்டி, 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 2010 வங்குவா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவை பற்றிய பணியறிக்கைகளை கூட்டம் கேட்டறிந்தது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுப் பணியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகை பாராட்டினார்.

1  2