உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் தோ லுன் மாவட்டத்திலிருந்து வந்த விவசாயி லி சான் சிங் தன் கணவனுடன் இங்கு வந்து, பீச் மரங்களை கவனித்தார். அவர்கள் திங்கள் தோறும் 400 யுவான் வருமானத்தைப் பெறலாம். எஜமானின் வீட்டில் தங்கி வாழ்கின்றனர். வாழ்க்கைக்கும் மருத்துவச் சிகிச்சைக்கும் உத்தரவாதம் கிடைத்துள்ளது. அன்றி, தமது ஊருக்கு அடிக்கடி பணம் அனுப்பலாம். இது பற்றி, அவர் கூறியதாவது,
"எங்கள் ஊரில் காலநிலையை நம்பி வாழ்க்கை நடத்தினோம். மழை பெய்தால், நல்ல அறுவடை பெறலாம். இல்லை எனில், அறுவடை கிடையாது. இங்கு வந்த பின், வேலை கடினமில்லை, வருமானம் அதிகம். இப்போதைய வாழ்க்கை முன்பை விட இன்பமானது" என்றார் அவர்.
1 2 3 4
|