
DNAவின் கட்டமைப்பைக் கண்டறிந்து உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் பிரான்சிஸ் கிரிக், 88வது வயதில் அண்மையில் காலமானார். நீண்டகாலமாகப் புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த அவர், அமெரிக்காவின் சான்டியோகாவில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் உயிர் நீத்தார். இங்கிலாந்தில் பிறந்த கிரிக், 1962 இல் நோபல் பரிசை வென்றார். 1953 இல், DNA வின் கட்டமைப்பைக் கண்டறிந்ததற்காக இந்தப் பரிசு வழங்கப் பெற்றது. அவருக்குத் துணை நின்ற ஜேம்ஸ் வாட்ஸன், மௌரிஸ் வில்கின்ஸ் ஆகியோரும் இந்தப் பரிசுப் பகிந்து கொண்டனர். கிரிக், தாம்ஸன் எனும் இருவரும் இளமையிலிருந்தே உற்ற நண்பர்களாக இருந்து வந்தனர். DNA கண்டுபிடிப்புக்குப் பிறகு, இந்த இரண்டு பெயர்களும் ஒன்றாகவே பேசப்பட்டுவந்தன. "பிரான்சிஸ் கிரிக்கை, எப்போதும் நினைவில் வைத்திருப்பேன், மறக்க முடியாத நபர் ஆவர். காரணம்-அறிவுக் கூர்மை மிக்கவர், தவிர, என்மீது அன்பும் பரிவும் காட்டியவர். என் தன்னம்பிக்கையை வளர்த்தவர் அவர்" என்கிறார் வாட்ஸன். "கேம்பிரிட்ஜில், அவருடன் சிறிய அறையில் இரண்டு ஆண்டுக்காலம் தங்கியிருந்தது, என் வாழ்க்கையில் நான் பெற்ற பேறு" என்று பெருமைப்படுகிறார் வாட்ஸன் 1916 ஜுன் எட்டாம் நாள், பிரிட்டனின் நார்த் ஆம்டன் நகரில் பிறந்த கிரிக், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தார். ஆய்வுப் போராசிரியர், ஸால்க் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அவர். "ஈடு இணையற்ற அறிவியலாளர் எனும் பெருமை பெற்றவர் பிரான்சிஸ் கிரிக்" என்கிறார் ஸால்க் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் மர்பி.
1 2
|