
காலணி தொழிற்சாலையின் உரிமையாளருக்கு மகனாகப் பிறந்த கிரிக் இயற்பியல் படிப்பில் ஆர்வம் காட்டினார். ஆனால், இரண்டாம் உலகப் போர் காரணமாக, அவரது படிப்பு தடைபட்டது. 1951 இல், அவரது வாழ்வில் திருப்பம் நிகழ்ந்தது. அவரை விட 12 வயது குறைவான, வளவளா என்று எப்போதும் பேசும் பழக்கும் கொண்ட ஜேம்ஸ் வாட்ஸன் எனும் அமெரிக்க இளைஞருடன் அவருக்கு நட்பு மலர்ந்தது. இவ்விருவரும் இணைந்து, 1953 இல் DNAவின் கட்டமைப்பை முதன்முறையாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். 1966இல் "MDECOLE AND MAN" எனும் நூலை கிரிக் எழுதி வெளியிட்டார். 1981 இல், "MOLECULES AND MEN", 1994இல் "THE ASTONISHING HYPOTHESIS" எனும் நூல்களை அவர் எழுதினார். கிரிக்கின் மனைவி ஜடிலெ ஸ்பீட், DNAவின் அமைப்பை வரைந்து தந்தவர். DNA உள்ளவரை பிரான்சிஸ் கிரிக்கின் பெயரும் நிலைத்து நிற்பது உறுதி. 1 2
|