
இ இன இளைஞரான Huang Pingshan தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்து இ இனத் தன்னாட்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது பெய்சிங் மாநகரின் நூல் கூட்டு நிறுவனத்தில் பணி புரிகின்றார். 32 வயதான அவர், கணிணியியல் படிப்பை முடித்தவர். இ இனத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை பலரும் புரிந்து கொள்ளச் செய்திடும் வகையில் இ இனத்தவர் இணைய தளத்தை நடத்த அவர் எண்ணினார். இது பற்றி அவர் கூறியதாவது:
"நாள்தோறும் பரபரப்பாகப் பணி புரிகின்றேன். முன்பை விட அதிக பணம் சம்பாதிக்கின்றேன். மக்களுக்கு நன்மை பயக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என நினைத்தேன். எனவே, இ இனத்தவர் இணைய தளம் ஒன்றை நடத்த முடிவு மேற்கொண்டேன்" என்றார் அவர்.
1 2 3 4
|