ஓய்வு நேரத்தில் இணையத் தளத்தை நிறுவத் துவங்கிய பின், அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. முன்பு, வேலை முடிந்து வீடு திரும்பிய பின், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பார்; இணைய தளத்தைத் திறந்து பார்ப்பார்; வார இறுதியில் மனைவியுடன் வெளியே போய் வருவார். அல்லது திரைப்படத்தைப் பார்ப்பார். சில வேளையில், நண்பர்களுடன் அளவளாவுவார். ஆனால், இணைய தளத்தை நடத்தத் துவங்கிய பின், பிறருடன் தொடர்பு கொள்ள வேண்டும். இணைய தளத்தை செழிக்கும் வகையில், இ இன வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான உள்ளடக்கங்களை தேடிப்பிடிக்க வேண்டும். ஆர்வமிக்க இணைய நபர்களுடன் அனுபவத்தைப்பரிமாறிக்கொள்ள வேண்டும். இவ்வாறு மும்முரமாக இருப்பதால், வேலை முடிந்த போதிலும் வீடு திரும்பமுடிய வில்லை. அன்றி, வார இறுதி நேரத்தையும் பயன்படுத்த வேண்டும்.
1 2 3 4
|