எல்லாம் திட்டமிட்டபடி நிறைவேறினால் 2011 ஆம் ஆண்டில், புதன் கோளை வலம் வரும் முதல் விண்கலம் எனும் பெருமையை மெஸஞ்சர் பெறக்கூடும்.
இந்த விண்கலத்தில் இடம்பெற்றுள்ள 7 அறிவியல் கருவிகள், புதனை வலம் வரும் போது, ஓராண்டு முழுவதும், தரவுகளைச் சேகரிக்கும்.
புதன்கோளை மெஸஞ்சர் அணுகும் போது, 370 செல்சியஸ் வெப்ப நிலையினால் அது தள்ளப்படும். ஆனால், அதன் கருவிகள் அறை வெப்ப நிலையில் செயல்படும்.

மெஸஞ்சர் விண்கலப் பயணம் தொடர்பான அனைத்தையும் உருவாக்கித் தந்தது-ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்.
மொத்தச் செலவு 42 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டாலராகும்.
புதன் கோளின் அனைத்துப் பக்கங்களிலும், மெஸஞ்சர் பார்வையை ஓட விடும் என்று அறிவியலாளர் தெரிவிக்கின்றனர்.
1 2 3
|