
புதன் கோளானது, சூரிய மண்டலத்தில் இடம் பெற்றுள்ள மிகவும் வெப்பமான கோள்களில் ஒன்றாகும். நண்பகலில் அதன் வெப்ப அளவு, 900 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
புதன் கோளில் பனி அதாவது ICE உண்டா என்று மெஸஞ்சர் ஆராயவிருக்கின்றது.
பூமியில் உள்ள வானொலி தொலைநோக்காடிகள் மூலமாகப் பார்த்த போது, புதன் கோளில் பனி இருப்பதற்கான வாய்ப்பு தெரியவந்தது.
புதன் கோளின் கட்டமைப்பு, விசித்திரமானது. அதன் மூன்றில் இராண்டு பகுதி, இரும்பாலானது.
பூமி போல அது உருப் பெற்ற, பின்னர் கற்களை இழந்து விட்டிருக்கலாம் என்கிறார் மெஸஞ்சரின் முதன்மை அறிவியலாளரான ஸீன் சாலமன் 1 2 3
|