திபெத் பீடபூமியில் வாழும் திபெத் இன மக்கள், குதிரையேற்றத்திலும் துப்பாக்கி சுடுவதிலும் தேர்ச்சி பெற்றவர். குதிரையேற்றம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும். 18 ஆண்டுகளுக்கு முன் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் முதலாவது தொழில் முறை குதிரை ஏற்ற அணி ஒன்று உருவாக்கப்பட்டது. இவ்வணியில் 40 திபெத் இளைஞர்கள் இடம்பெற்றனர். இவர்களில் 16 வயதான தாவா சோமாவும் ஒருவராவார். அவரும் இதர 10 பெண் கூட்டாளிகளும் இவ்வணியில் சேர்ந்தமை சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் பெரும்பாலான திபெத் மக்கள், குதிரையேற்றம் என்பது, ஆடவருக்கு உரியது என்று கருதுகின்றனர்.
1 2
|