தாவா சோமா குகிரையேற்றப் பயிற்சியில் கலந்து கொள்வதை அறிந்து அவருடைய குடும்பத்தினர் வியப்பு அடைந்தனர். குதிரையேற்றமானது, குதிரைப் படையினர் போரிடுவது போன்றது. மகளிர் குதிரையேற்றக்கலையைப் பயில்வது சரியில்லை என்று அவர்கள் கருதியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தயக்கமின்றி இவ்வணியில் அவர் பயிலலானர். இது குறித்து அவர் கூறியதாவது— "என்னைப் பொறுத்த வரை, குதிரையேற்றம் எனக்கு முதல் முறையாகும். அப்போது எனக்குச் சற்று பயமாக இருந்தது. எங்கல் மகளிர் அணியில் சின்குவா எனும் மங்கோலிய இனப் பெண்மணி, குதிரையேற்றக் கலையை எங்களுக்குக் கற்பித்தார். குதிரையை எவ்வாறு வெளியே கொண்டு வருவது, உலா வரச்செய்வது என்பது பற்றி அவர் முதலில் எங்களுக்குக் கற்பித்தார். வரவர, குதிரையுடன் பழகுவதில் நான் தேர்ச்சி பெற்றேன்" என்றார் அவர்.
குதிரையேற்றக்கலையானது, குதிரைப் படை போரிடுவதிலிருந்து தொடங்கியது. தற்போதைய குதிரையேற்றக்கலையில் குதிரை முதுகில் நடனம், ஜிம்னாஸ்டிக் போன்ற தொழில் திறனைக் காட்டும் அம்சங்கள் அதிகரித்துள்ளன. கடும் பயிற்சிக்குப் பின், தாவா சோமாவும் அவர் கூட்டாளிகளும் குதிரை முதுகில் அமர்ந்து, விதம் விதமான நிகழ்ச்சிகளைக் காட்ட முடிந்தது. அத்துடன் குதிரையேற்றக் கலை அணியுடன் திபெதின் பல்வேறு இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினார். 1 2
|