• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-08 15:59:27    
தாவா சோமா அம்மையார்

cri

வெற்றிகரமான அரங்கேற்றமானது, கடின பயிற்சியுடன் நெருங்கிய சொடர்புடையது. தாவா சோமாவின் வலது கை மணிக்கட்டு எலும்பு புடைத்து நிற்கின்றது. அவருடைய கால்கள் காயமுற்றன. குளிர்காலத்தில் அவை வலிக்கின்றன. அவை எளிதில் சுளுக்கிக்கொள்ளும். குதிரையேற்றத்தில் தனக்குத் திறமை இல்லை என்றாலும், சிரமப்பட்டுப் பயில்வதன் மூலம் தான் தற்போது திறன் பெற்றிருப்பதாக அவர் கூறினார். பயிற்சியின் போது, அவர் பல முறை குதிரை முதுகிலிருந்து கீழே விழுந்தார். இடது கையும் வலது கை மூட்டும் முறிந்தன. ஒருமுறை, குதிரை உதைத்துவிட்டது. அதன் காரணமாக, அவர் நாள் முழுவதும் சுய நினைவு இழக்க நேரிட்டது. ஆனாலும் அவருடைய பயிற்சி பாதிக்கப்படவில்லை. குதிரையேற்றக் கலைப் பயிற்சியில் சிரமமும் பூரிப்பும் காணப்படுவதாக, அவர் கூறினார்.

"குதிரை முதுகிலான பயிற்சியானது, எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் அது எனக்கு பெரும் ஊக்கமும் அளிக்கிறது. ஓரளவு ஆபத்து நேர்ந்தாலும், இது எனக்குப் பிடித்தமானது. குறிப்பாக வீராங்கனைகளாகிய நாங்கள், குதிரை மீது அமர்ந்து பாட்டு பாடும் போது, பெரிதும் பூரிப்படைக்கிறோம்" என்றார் அவர்.

1  2