• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-08 15:59:27    
தாவா சோமா அம்மையார்

cri

 குதிரையேற்றக் கலை மீதான அன்பு, அயரா உழைப்பு ஆகியவற்றின் காரணமாக, தலைசிறந்த குதிரையேற்ற வீராங்கனையாக அவர் மாறியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளில் அவர் மூன்று முறை அனைத்துச் சீன சிறுப்பான்மைத் தேசிய இன விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்றத்தில் முதல் பரிசு பெற்றார். இதனால் திபெத் வரவாற்றில் முதலாவது குதிரை யேற்றக் கலைப் பயிற்சியாளராக அவர் மாறினார். தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பது தவிர, ஓய்வு நேர குதிரையேற்ற அபிமானிகளுக்கும் பாடம் கற்பிப்பார். மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் போது, கண்டிப்பாக இருப்பார். அவர்களை விமர்சனம் செய்வார். மாணவர்கள் அவரை பெரிதும் விரும்புகின்றனர். ஓய்வு நேரத்தில் அவர்கள் சகோதரி போல் பழகுகின்றனர். லாபா ஜொன்தா என்பவர் கூறியதாவது—

"பயிற்சியின் போது அவர் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் அவர் எங்களை மிகவும் கவனிக்கிறார். எவராவது காயமுற்றால், அவருக்கு உதவுகிறார். யாருக்கு உதவி வேண்டுமோ அவருக்கு உடனே நட்புக்கரம் நீட்டுவார். சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டால், அவர் தயக்கமின்றி எங்களுக்கு உதவுகிறார்" என்றார் அவர். கடந்த ஆண்டு, தாவா சோமா பயிற்சி அளிக்கும் அணி, அனைத்துச் சீன சிறுபான்மைத் தேசிய இன விளையாட்டுப் போட்டியில், இரண்டு தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றது. நேயர்கள் இது வரை, குதிரையேற்றக் கலைப் பயிற்சியாளர் தாவா சோமா பற்றி கேட்டீர்கள். இத்துடன் சீன மகளிர் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


1  2