
வட சீனாவில் அமைந்துள்ள டியான்ஜின் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன், துறைமுகமாகத் திகழ்ந்தது. நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த கப்பல்கள் அங்கு போய்வந்தன. 600 ஆண்டுகளுக்கு முன் அது நகராக மாறியது.சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் அது வளமடையத் துவங்கியது. 1840ஆம் ஆண்டு அபினி போருக்குப் பின் அதிகமான வெளிநாட்டு துணிச்சல்காரர், பணக்காரர், சமயப்பரப்பாளர் ஆகியோர் தியென்ஜினில் வங்கி, கோயில், பெரிய கடை, பூங்கா, தோட்டம் சூழந்த மனை ஆகியவற்றைக் கட்டியமைத்தனர். உள் நாட்டின் அரசியல்வாதிகள், ராணுவப் பிரபுக்கள், தரகர்கள் ஆகியோரும் சொந்தமாகக் கட்டி தொழில் துவங்கினர் என்று தியென்ஜின் மாநகர வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் லுசியெ கூறினார்.

100 ஆண்டு கால வளர்ச்சியினால், தியென்ஜின் மாநகரம் மிகவும் வளமடைந்துள்ளது.இந்நகரின் பழைய நகரப்பகுதி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது, இந்நகரின் பழக்க வழக்கத்தின் தோற்றுவாயாகும். அண்மைக் கால தியென்ஜின் மாநகரின் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமும் ஆகும். இவற்றில் மிங் மற்றும் சிங் வமிசக் கட்டிடப் பாணியுடன் கடியமைக்கப்பட்ட குலோ வணிகப் பிரதேசமானது, சுற்றுலா, பண்பாடு, பொழுதுபோக்கு ஆகியவற்றைக் கொண்ட மாபெரும் வணிக வீதியாகும். இவ்வணிகப் பிரதேசத்தின் கிழக்கு வீதி, பொருள் விற்பனை வீதி. வடக்கு வீதி, பொருள் மற்றும் நகை வகை விற்பனை வீதி. தெற்கு வீதி, துங்பாங் இரவு பொழுது போக்கு இடமாகும். தியென்ஜின் மாநகரின் குலோ எனும் இடம், இந்நகரின் சின்னமாகும். தொன்மை வாய்ந்த சின்னமும் ஆகும். 1 2
|