
600 ஆண்டு வரலாறுடைய இவ்விடம், வரலாற்றை நினைவு கூர மக்களுக்குத் துணை புரியலாம் என்றார் அவர். எடுத்துக்காட்டாக, 5 முக்கிய வீதிகளில், சுமார் 160 ஆண்டுகளுக்கு முந்திய அபினி போருக்குப் பின் வெளிநாட்டவர் தியென்ஜினில் கட்டியமைத்த வங்கி, கோயில், பெரிய கடை, பூங்கா உள்ளிட்ட கட்டடங்கள் இன்றும் காணப்படுகின்றன. பன்னாட்டுக் கட்டடக் காட்சியகம் என்று அது அழைக்கப்படுகின்றது. வேறுபட்ட பாணிகளில் கட்டியமைக்கப்பட்ட ஆயிரமாயிரம் கட்டடங்கள், சென்து வீதி, சான்தெ வீதி ஆகிய 5 முக்கிய வீதிகளில் அமைந்துள்ளன என்று 70 வயதான வான் சன்துங் கூறினார்.5 முக்கிய வீதிகள் இடம்பெறும் காட்சித் தளத்தில் ஐரோப்பிய பாணியிலான 230 கட்டடங்கள் உள்ளன. இது, சீனாவின் கடந்த கால 100 ஆண்டு வரலாற்றைப் பிரதிபலிக்கும் சுற்றுலா நெறியாகும். இது, உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனிச் சிறப்பியல்பு வாய்ந்த ஈர்ப்புத் தன்மையுடையது என்று கூறலாம் என்று தியென்ஜின் மாநகரின் ஹொபிங் குடியிருப்புப் பிரதேசத்தின் பண்பாட்டு மற்றும் சுற்றுலாப் பணியகத் தலைவர் வான்யெமிங் கூறினார். 1 2
|