• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-27 09:06:07    
சீன வீரர் லீயூ சியாங் சாம்பியன் பட்டம் பெற்றார்

cri

தென்னிஸ் சீன தென்னிஸ் ஒப்பன் போட்டியின் ஆடவருக்கான ஒற்றையர் போட்டி 19ந் நாள் இரவு பெய்சிங்கில் நடைபெற்றது. ரஷிய வீரர் சாபின் 2-0 என்ற செட் கணக்கில் தன் அணி தோழர் யூட்ஸ்னியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். கடந்த இரு ஆண்டுகளில் அவர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும். மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகளான லீ திங், சுன் தியன் தியன் ஜோடி, எதிரணியைத் தோற்கடித்து, அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் விலியம்ஸ் எதிரணியினரை தோற்கடித்து அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

தடகளப் போட்டி சர்வதேச தடகள் சம்மேளனத்தின் அனைத்து நட்சத்திர வீரர் போட்டி செப்டம்பர் 23ந் நாள் ஜப்பானில் நிறைவடைந்தது. இப்போட்டியில் கலந்துகொண்ட, ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற 8 வீரர்களும் வெற்றி பெற்றனர். சீன வீரர் லீயூ சியாங் 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் 13.31 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து முதலிடம் பெற்றார். மகளிருக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் சீன வீராங்கனை சாங் வென் சியூ வெற்றி பெற்று முதலிடம் வகித்தார்.


1  2