இயற்கை எரிவாயுவை, நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்புவது என்ற திட்டப்பணியில், சீன அரசு, 14000 கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. சீனாவின் மேற்குப்பகுதியிலுள்ள சின்சியாங் வைய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் இயற்கை எரிவாயு, கிழக்கு சீனாவின் சியாங்சு, ஷாங்காய் உள்ளிட்ட யாங்சி ஆற்று முகத்துவாரப் பிரதேசத்துக்கு அனுப்படுகிறது. அதன் முக்கிய குழாயின் நீளம், 4 ஆயிரம் கிலோமீட்டராகும்.
இயற்கை எரிவாயுவை, நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்பும் நிறுவனமானது, இத்திட்டப்பணியின் கட்டுமானம், நிர்வாகம், இயற்கை எரிவாயுவின் விற்பனை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கிறது. இத்திட்டப்பணி, சீராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, மூன்றில் இரண்டு பகுதி பணி நிறைவடைந்திருப்பதாக, இந்நிறுவனத்தின் துணை மேலாளர் WU HONG கூறினார்.
இத்திட்டப்பணியில், சுமார் 20 ஆயிரம் உழைப்பாளர்கள், இரவு பகல் பாராது, மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டின் ஜனவரி 1ம் நாள் முதல், ஷாங்காய் மாநகரத்துக்கு எரிவாயுவை வழங்கும் குறிக்கோளை நனவாக்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று WU HONG தெரிவித்தார்.
இத்திட்டப்பணியானது, சீனா, மேற்கு பகுதி பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்யும் முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாகும். மேற்குப்பகுதியின் வளம் மிக்க இயற்கை எரிவாயுவை, கிழக்கு பிரதேசத்துக்கு அனுப்புவதன் மூலம், மேற்கு பகுதியின் மூலவளத்துக்கு சந்தையை வழங்கி, மேற்கு பகுதி மற்றும் இத்திட்டப்பணியின் நெடுகிலுமான பிரதேசப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவிக்க விரும்புவதாக, சீன அரசு, தெரிவித்துள்ளது. இதுவரை, இத்திட்டப்பணி, அப்பிரதேசத்தின் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது என்று, சின்சியாங்கில் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், தெரிவித்தனர்.
தொழிலாளர்களுக்கு தேநீரை வழங்குவதன் மூலம், ஒரு வைய்கூர் இன கிழவர், தமது வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தியுள்ளார்;திட்டப்பணிக்குழுவுக்கான வாழ்க்கைப் பொருட்களை அனுப்புவதால், வேளாண் பயன்பாட்டு வாகனங்கள் உடைய குடும்பங்கள் பொருளாதார வருமானத்தை அதிகரித்துள்ளன. சின்சியாங்கிலுள்ள இத்திட்டப்பணி கட்டுமானத்தின் நிர்வாக அதிகாரி SHI YUHAI, கூறியதாவது.
1 2
|