• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-29 11:13:17    
மாபெரும் திட்டப்பணி

cri

இத்திட்டப்பணியின் சின்சியாங் பகுதியில், சுமார் 600 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், இப்பிரதேசத்தின் தாதுத் தொழில் நிறுவனங்களுக்கு வசதி கிடைத்துள்ளது. இத்திட்டப்பணியின் சின்சியாங் பகுதி, மனிதநடமாட்டம் இல்லாத பிரதேசத்தில் அமைந்ததால், பொருட்கள் அனைத்தும், வெளியிலிருந்து வர வேண்டும். பல லட்சம் டன் பொருட்களின் வரத்தானது, உள்ளூரின் வண்டிகளைச் சார்ந்ததால், உள்ளூருக்கு பொருளாதார நலன் கிடைத்துள்ளது என்றார் அவர்.

இத்திட்டப்பணி நிறைவடைந்த பின்பு, எரிவாயு வயல் மற்றும் குழாய் தொழில் நிறுவனங்கள், உள்ளூர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். பெருமளவிலான எரிவாயு நிலையங்கள், குழாய் நெறிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்குத் தேவையான கட்டிட்டப் பொருட்களால், உள்ளூரின் கட்டிட்டப் பொருள் சந்தையின் வளர்ச்சியை முன்னேற்றுவிக்கவுள்ளன.

இயற்கை எரிவாயுவை, நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்புவது என்ற திட்டப்பணியின் நடைமுறை, சுற்றுச் சூழலின் மேம்பாட்டுக்குத் துணைபுரியும். இத்திட்டப்பணியின் ஒருபகுதியான, யாங்சி ஆற்றின் முகத்துவாரமானது, சீனாவில் பொருளாதார வளர்ச்சி மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும். அங்குள்ள உயர் புதிய தொழில் நுட்ப தொழிற்துறை மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு, தூய்மையான எரி ஆற்றல் தேவைப்படுகிறது. ஷாங்காய் மாநகரம், ஆண்டொன்றுக்கு, சமார் 4 கோடி டன் நிலக்கரியைப் பயன்படுத்துகிறது. இதனால், ஷாங்காய் நகரிலும், சியாங்சு மாநிலத்திலும், 10 விழுக்காடு அமில மழை பெய்துள்ளது. இத்திட்டப்பணி மூலம், இப்பிரதேசத்தின் எரி ஆற்றல் செலவு அமைப்பு பெருமளவில் சரிப்படுத்தப்படும். காற்றின் தரம் மேம்படுத்தப்படும்.

திட்டப்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் நாள், சின்சியாங்கின் இயற்கை எரி வாயு, ஷாங்காய் மாநகருக்கு கிடைக்கவுள்ளது. எரி வாயுவை வெகுவிரைவாக ஷாங்காய்க்கு வழங்க வேண்டும் என, தொடர்புடைய துறை விரும்புவதாக LI SHIQUAN என்பவர் கூறினார்.

ஷாங்காய் மாநகர அரசு, ஏப்ரல் நடுப்பகுதியில், இவ்வாண்டு குளிர்காலத்தின் எரிவாயு வழங்கல் பிரச்சினையை, ஆய்வு செய்துள்ளது. தற்போது, இயற்கை எரிவாயுவின் வாங்கல் மற்றும் விற்பனை உடன்படிக்கை குறித்து, இப்பிரதேசத்தின் நகர்வோருடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினோம் என்றார் அவர்.

இயற்கை எரிவாயுவை, நாட்டின் மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்புவது என்ற திட்டப்பணியானது, இதன் நெடுகிலும் உள்ள பிரதேசங்களுக்கு, ஆக்கப்பூர்வ மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தவிர, சீனாவில், எரி ஆற்றல் உயிர் நாடி ஒன்றை அதிகரிப்பதுடன், கிழக்குப் பகுதிக்கும், மேற்குப் பகுதிக்குமிடையில், பொருளாதார வளர்ச்சியின் தொடர்பை வலுப்படுத்தி, இவ்விருபகுதியும், கூட்டாக வளர்ச்சியடைவதற்குத் துணைபுரிகிறது.


1  2