• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-18 14:11:15    
ஆசிய விளையாட்டுத் துறை செய்தியாளர் கூட்டம்

cri

அக்டோபர் 8ந் நாள் மகௌவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுத் துறை செய்தியாளர் ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தில், 2008ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் கமிட்டியின் செய்தி மற்றும் பிரச்சாரப் பகுதித் துணைத் தலைவர் சௌ சி வெய் உரை நிகழ்த்தினார். 2008ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணி பற்றி அவர் செய்தியாளரிடம் எடுத்துக் கூறினார்.
 
நகரக் கட்டுமானத்தை பெய்சிங் மாநகரம் விரைவுப்படுத்தி, வளிமண்டல மற்றும் உயிரின வாழ்க்கை சூழல் தூய்மை கேட்டை கட்டுப்படுத்தி வருகின்றது. அதேவேளையில், பெய்சிங்கின் வரலாற்று பண்பாட்டு பாதுகாப்பு பிரதேச அளவும் மேலும் விரிவாகியுள்ளது. புகழ்பெற்ற வரலாற்று தலங்களை பாதுகாத்து பராமரிப்பு செய்யும் வகையில் 2003ஆம் ஆண்டுமுதல் 2008ஆம் ஆண்டுவரை சுமார் பத்து கோடி அமெரிக்க டாலரை பெய்சிங் முதலீடு செய்யவுள்ளதாகவும் சௌ சி வெய் கூறினார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 55வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹாங்காங் விளையாட்டுத் துறை நடத்திய குதூகல கூட்டத்தில் சீன ஹாங்காங் ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ஹோ சென் திங் உரைநிகழ்த்தினார். வரலாற்றில் கிழக்காசி நோயாளி என மேலை நாடுகள் சீனவை அவமானப்படுத்தி அழைத்திருந்தது. ஆனால் இன்று வலுவான சீனா ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனா 32 தங்கப் பதக்கங்களை பெற்று உலகில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. சீன விளையாட்டு வீரர்கள் பெற்ற சாதனை அனைத்து சீன மக்களும் பெருமை அடையச் செய்துள்ளது என்று அவர் கூறினார்.

வாள் போட்டி, சீனாவில், பிரெஞ்சு பண்பாட்டு ஆண்டு துவக்க விழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றான சீன-பிரெஞசு வாள் போட்டி, பெய்சிங்கிலுள்ள மோட்சக் கோயில் பூங்காவில் நடைபெற்றது. இறுதியில் பிரெஞ்சு அணி 2-1 என்ற செட் கணக்கில் சீன அணியைத் தோற்கடித்தது.

வான் குடை குதிப்பு 2004ஆம் ஆண்டு அக்டோபர் 5ந் நாள் நடைபெற்ற ஷாங்கை மாநகரில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சி வான் குடைக் குதிப்பில் 41வயதான சீன வீரர் திங் சியன் பிங் 420.5மீட்டர் உயரமான ஜின் மௌ கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்தார். சீனாவின் முதலாவது தாழ்ந்த வான்குடை குதிப்பு வீரர் இவராவார். திங் சியன் பிங் என்பவர் 5200 முறையாக உயர்ந்த வான்குதிப்பில் ஈடுபட்ட அனுபவமுடையவர். 2001ஆம் ஆண்டு, அவர் ஒரு எரி மலையிலிருந்து குதித்து உலக கின்னஸ் சாதனையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

1  2