• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-18 14:11:15    
ஆசிய விளையாட்டுத் துறை செய்தியாளர் கூட்டம்

cri

கார் ஓட்டப் போட்டி, உலக F1 கார் ஓட்ட சாம்பியன்பட்ட போட்டியின் ஜப்பானிய சுற்றுப் போட்டியில் FERRARI அணியைச் சேர்ந்த MICHAEL SCHUMACHER மீண்டும் வெற்றி பெற்றார். அவர் ஒரு மணி 24 நிமிடம் 26.985 வினாடி என்ற சாதனையுடன் முதலிடம் வகித்து தமது கார் ஓட்டத் தொழிலிலான 83வது வெற்றியை பெற்றார். அவரது தம்பி RALF SCHUMACHER இரண்டாம் இடம் பெற்றார்.

மராதன் அக்டோபர் 10ந் நாள் முடிவடைந்த தெற்கு ஆபிரிக்க அரை தூர மராதன் ஓட்டப் போட்டியில் சிம்பாபுவே விளையாட்டு வீரர் என்யாசங்கோ ஒரு மணி 29 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மலாவியின் வீராங்கனை சென்தாமலை ஒரு மணி 15 நிமிடம் 09 வினாடியில் தூரத்தை ஓடிமுடித்து மகளிர் குழுவின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

நீச்சல், அக்டோபர் 11ந் அமெரிக்காவில் நடைபெற்ற உலக குறுகிய தூர நீச்சல் சாம்பியன்பட்டப் போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி 3 நிமிடம் 25.09 வினாடி எனும் சாதனையுடன் உலக சாதனையை முறியடித்தது. ஆடவருக்கான 200மீட்டர் தலைநிமிர்ந்த நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வீரர் ஏ. பெல்சோ 1 நிமிடம் 50.52 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து உலக சாதனையை முறியடித்தார்.

1  2