
பெயெ எனும் பனை மரத்தின் இலையில் திருமறை வாசகத்தை எழுத கற்றுக்கொள்ளலாம். இத்தகைய இலையிலான திருமறையானது, தைய் இனச் சமூகத்தின் கலைக் களஞ்சியம் என்று போற்றப்பட்டுள்ளது. தைய் இன வரலாற்றில் மதிப்பு மிக்க மருந்து வகை, வானியல், சட்டம் ஆகியவை இவ்விலைகளில் இடம்பெற்றுள்ளன.ஆனால், தற்போது, இம்முதியோரின் செயல், தனிநபர் விருப்பம் மட்டுமே. தாம் இவ்வாறு செய்ய விரும்புவதாக அந்த முதியவர் தெரிவித்தார். இதற்கு 2 நோக்கங்கள் உள்ளன. ஒன்று, இக்கிராமத்துக்கு வருகை தரும் பயணிகளுக்குத் தைய் இனத்தின் கருவூலத்தைக் காட்டலாம். மற்றது, கோயிலுக்கு வழங்கலாம் என்றார் அவர்.

தைய் இன மக்களனைவரும் பௌத்த மத நம்பிக்கையுடையோர். ஒவ்வொரு கிராமத்திலும் கோயில் உண்டு. வறிய கிராமத்திலும் சரி, செல்வமடைந்த கிராமத்திலும் சரி, கோயிலானது, தரமான கோயிலாகும் என்று யூவன் கூறினார். அழகாக அலங்கரிக்கப்பட்ட கோயிலைச் சுட்டிக்காட்டிய வண்ணம் யூவன் கூறுகிறார்: இக்கோயில் கி.பி. 583ல் கட்டியமைக்கப்பட்டது. சுமார் 1400 ஆண்டு வரலாறுடையது. கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், முக்கிய மத நடவடிக்கை நடைபெறும் போது, மக்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வர் என்றார் அவர்.
தற்போது, இந்தக் கிராமத்தில் சுற்றுலாத் துறை விறுவிறுபாக நடைபெறுகின்றது. பயணிகள், தைய் இனப் பாடலை அல்லது நடனத்தைக் கற்றுக்கொள்ளலாம். 1 2
|