
தைய் இன உணவை உண்ணலாம். தைய் இன மக்களின் வீட்டு வேலையில் ஈடுபடலாம். தைய் இன மக்களின் வீட்டில் ஓரிரவு தங்கலாம். அவர்களின் வாழ்க்கையை உணரலாம். நீர்த் தெளிப்பு விழாவில் கலந்துகொள்ளலாம்.
இக்கிராமத்தில், பலரின் வீட்டில் பயணிகள் தங்கியிருந்தனர். வீட்டு உரிமையாளர் யூபோ கூறியதாவது, தைய் இன மக்களின் உணவைப் பயணிகள் விரும்புகின்றனர். பிரச்சினையில்லை.

தைய் இன மக்களின் வீட்டில் தங்கியிருப்பது குறித்து, மகிழ்ச்சியடைகின்றனர். எங்களுக்கும் மகிழ்ச்சி. சில பயணிகள் 2 அல்லது 3 திங்கள் காலம் இங்கு வசித்தனர் என்றார் அவர்.
சுற்றுலாத் துறையில் ஈடுபடுவதற்கு முன், தமது குடும்பத்தின் முக்கிய வருமானம், பயிரிடுவது, பழ மரம் வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் கிடைத்தது. ஆனால் இப்போது, இக்கிரமத்திலுள்ள அனைத்து தைய் இன மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது என்று யூபோ கூறினார். 1 2
|