முன்பு இருந்த 100க்கு அதிகமான பட்டணங்களை இவ்வாண்டின் முற்பாதியில், 59 பட்டணங்களாக வூ சி நகர் உருவாக்கியுள்ளது. இந்நடவடிக்கை, நிர்வாக ரீதியிலான பிரித்தலையும் பணியாளரின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. நிர்வாகச் செலவையும் குறைத்து, விவசாயிகளின் சுமையைத் தணிவுப்படுத்தியுள்ளது. ஜியாங் இன் நகருக்கு முக்கிய பொறுப்பாளரில் ஒருவர் ஹுவாங் மான் ஸோங் கூறியதாவது:
"ஜியாங் இன் நகரின் முழுமை வளர்ச்சித் திட்டத்தின் படி, சாங் குவான் பட்டணம், பட்டணமாக இல்லாமல், ஜியாங் இன் நகரிலுள்ள ஒரு குடியிருப்பு பிரதேசமாக மாற உள்ளது. அதன் பின், கிராம உழைப்பு ஆற்றல், நகரிலான குடியேற்றம் விரைவுபடுத்தப்படும். ஜியாங் இன் நகரின் நகரமயமாக்க நிலை உயரும்" என்றார் அவர்.
1 2 3
|