அரசின் திட்ட உருவரைவு மற்றும் முதலீடு தவிர, முன்னேறிய வட்டங்களின் மாதிரிப் பங்கு, வூ சி நகரமும் கிராமமும் ஒன்றிணைக்கப்படும் வளர்ச்சியை முன்னேற்றுவியுள்ளது. ஹுவா சி கிராமம் ஒரு முன் மாதிரி ஆகும். அது சீனாவின் முதலாவது கிராமம் என்ற புகழ் பெற்றது. வேளாண்மை, இரும்புருக்கு, இயந்திரம் ஆகிய கூட்டாண்மை பொருளாதாரம் விறுவிறுப்பாக வளர்ச்சியுற்று வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளில், அருகிலுள்ள கிராமங்களை அது ஒன்றிணைத்து, அவை வளமடைவதற்கு வழிகாட்டுகிறது. இக்கிராமத்தின் பொறுப்பாளர் வூ ரென் பாவ் கூறியதாவது:"இக்கிராமம், முன்பு 1 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய கிராமமாகும். இப்போது, 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 26 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய பெரிய கிராமமாக மாறியுள்ளது. பொருளாதார அளவு முன்பை விட அதிகம். இப்போது, நபர் வாரி ஆண்டு வருமானம் 8000 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. மிக வறிய குடும்பம் கூட, 80 ஆயிரம் யுவான் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாக உள்ளது" என்றார் அவர்.
தற்போது, வூ சி நகரின் நகரமயமாக்க விகிதம் 60 விழுக்காட்டை எட்டியுள்ளது. அங்கு, நகருக்கும் கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியை நீங்கள் உணர முடியாது. மக்களின் வாழ்க்கைத் தரம், நெருங்கி வருகிறது. முன்பு நகரில் வாழ்ந்த பலர், இப்போது, கிராமத்திற்குக் குடிபெயர்ந்துள்ளனர். அங்குள்ள தூய்மையான காற்று, அழகான சற்றுச்சூழல் ஆகியவற்றை அவர்கள் அனுபவிக்கின்றனர். 1 2 3
|