2004ம் ஆண்டு ஆசிரியர் விழா நாள் சுமார் 90 வயதான தை ஐ லியனைப் பொறுத்தவரை ஒரு சாதாரன நாள் அல்ல. செப்டெம்பர் திங்கள் 10ம் நாள் அவருடைய வெண்கல சிலை சீன நடன வட்டாரத்தின் மைல் கல்லாக பெய்சிங் நடன கல்லூரியின் வளாகத்தில் நாட்டப்பட்டுள்ளது.
வெண்கல சிலை மூத்த நடன கலைஞரின் மிகவும் அழகான கண்பார்வையை எடுத்துக்காட்டுகின்றது. இந்த வெண்கல சிலை நாட்டுவது என்பது தை ஐ லியன் மீதான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அன்பையும் அவருக்கான சீன நடன வட்டாரத்தின் நன்றியையும் காட்டுகின்றது.
தை ஐ லியன் 1916ம் ஆண்டு தலினிடாவில் பிறந்தார். 14 வயதான போது அவர் நடனம் கற்றுக் கொள்ள லண்டனுக்குச் சென்றார். நடன கலைஞர் ஆந்து தோலின், லுதோவு லாப்பென் முதலியோரிடமிருந்து நடனம் கற்றுக் கொண்டார். பின் நவீன நடன மூத்தவர் மாலி வெக்மெனின் மாணவியாக அவர் அவரிடமிருந்து நடனம் கற்றுக் கொண்டார். அப்போது பாலே நடனத்துக்கும் நவீன நடனத்துக்குமிடையில் எதிரெதிர் நிலை நிலவியது இத்தகைய நிலைமையில் தை ஐ லியன் அவற்றின் மேன்பாட்டை கற்றுக் கொண்டு புதிய கண்பார்வையுடன் கீழை நாட்டு கலை நுண்ணியத்தைக் கற்றுக் கொள்ளும் அதேவேளையில் சீன நடன வளர்ச்சி பாதையை அவர் படிப்படியாக ஆராய்ந்து கண்டறிந்தார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் வெடித்தெழுந்தமை தை ஐ லியனின் நாட்டுப்பற்றுணர்வை வைக்கிளப்பியது. 1939ம் ஆண்டு அவர் தாய்நாட்டுக்கு திரும்பி இந்த போராட்டத்தில் ஈடுபடலானார். " விமான தாக்குதல்", "கிழக்கு ஆறு", "விழிப்புடணர்வு", "பிறந்த ஊர் மீதான நினைவு" "கொரில்லா படை" என்ற தலைப்பில் பல நடன படைப்புகளை அவர் உருவாக்கினார. துன்பத்துக்குளாக்கப்பட்ட மக்கள் மீதான அனுதாபத்தையும் தாய்நாட்டின் தலைவிதி மீதான அக்கறையையும் இந்த படைப்புகள் எடுத்துக் காட்டின. அப்போது மிக பெரும் உற்சாகத்துடன் அவர் சீனாவின் பாரம்பரிய பண்பாட்டை கற்றுக் கொண்டு, மாபெரும் கலைஞர் சான் தாசியென், யெசியன்யு முதலியோருடன் நெருங்கி பழகி ஆழந்த பட்புறவை உருவாக்கினார். அவர் இதிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டார். 1 2
|