1940ம் ஆண்டுகளில் அவர் மக்களிடையில் பரவிய நடனங்களை அரங்கு நடனமாக புதுபித்து "யோ இனத்தவரின் மேள நடனம்" உள்ளிட்ட படைப்புகளை உருவாக்கி தாமாகவே அரங்கேற்றினார். திபெத் இனம், மியௌ இனம், உய்கூர் இனம் முதலிய தேசிய இன நடனக்கள் எல்லை பிரதேச நடன குதூகல கூட்டமாக உருவாக்கின. இதுவரை இந்த படைப்புகள் தொடர்ந்து மக்களால் வறவேற்கப்படுகின்றன.
1949க்கு பின் தை ஐ லியன் கலை படைப்பின் உச்ச நிலை காலத்தில் நுழைந்தார். அவருடைய நடன வாழ்க்கையில் பல பல முதலாவது என்பதை புதுப்பித்தார். "சமாதான புறா" என்னும் சீனாவின் முதலாவது இசை நடனத்தை புதுப்பி உருவாக்குவதில் அவர் பங்கு கொண்டு அரங்கேற்றினார். சீன தேசிய நடன குழுவின் முதலாவது தலைவராகவும் பெய்சிங் நடனப் பள்ளியின் முதலாவது தலைவராகவும், மத்திய பாலே நனடக் குழுவின் 1வது தலைவராகவும் அவர் பணிபுரிந்தார்.
இன்று விறுவிறுப்பான மாணவர்கள் தாம் படைத்த "தாமரை நடனம்", "ஆயாகத்தில் பறக்கும் தேவர்" ஆகிய நடனங்களை ஆடும் போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். இந்த 2 படைப்புகள் 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த நடனங்களாகும். தை ஐ லியனின் வாழ்விலுள்ள கலை ஆராய்ச்சியும் சாதனைகளும் இந்த படைப்புகளில் பொறிக்கப்படுகின்றன. சீனாவின் நடனத் துறை படிப்படியாகவும் நிதானமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது என்று இப்படைப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
தை ஐ லியன் மற்றும் 3 தலையிறந்த உலக பெண் நடன கலைஞர்களின் நிழல்படங்கள் பிரிட்டனின் ராயர் நடன கல்லூரியின் வரவேற்பு மண்டபத்தில் தொங்கப்படுகின்றன. கௌரவத்தின் முன் கௌரம் என் தாய்நாட்டுக்கு உரிய வேண்டும் என்று தை ஐ லியன் ஆழ்ந்த உணர்வுடன் கூறினார். இப்போது அவருடைய வெண்கல சிலை பெய்சிங் நடன கல்லூலியில் நாட்டப்பட்டுள்ளது. அதை கண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் ஆழந்த உணர்வுடன் தெரிவித்தார். 1 2
|