• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-15 08:46:13    
சியோல் நகரில் நடைபெற்ற மராதன் போட்டி

cri

பெய்சிங் மாநகராட்சித் தலைவர் வாங் சி ஷன்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்சிங் நேரம் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் எட்டாந் நாள் இரவு எட்டு மணிக்கு துவங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பெய்சிங் மாநகராட்சித் தலைவர் வாங் சி சன் இதை அறிவித்தார்.

மராதன் ஓட்டப் போட்டி, 7ந் நாள் நடைபெற்ற சியோல் நகர் சர்வதேச மராதன் ஓட்டப் போட்டியில் சீன வீராங்கனை சாங் சு ஜிங் 2 மணி 36 நிமிடம் 22 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

சிஆன் நகர மராதன் ஓட்டப் போட்டி

2004ஆம் ஆண்டு சீஆன் நகர் சர்வதேச மராதன் ஓட்ட போட்டி 6ந் நாள் நடைபெற்றது. இந்நிகரில் மராதன் ஓட்ட போட்டி நடைபெறுவது இது பத்தாம் முறையாகும். ஓட்ட நெறி பழைய நகரச் சுவர் வழியாக செல்வதனால், உலகில் தனிச்சிறப்பு மிக்க, கவர்ச்சிமிக்க மராதன் போட்டி என அது அழைக்கப்படுகின்றது. சீனாவின் மிங் வம்ச ஆட்சிக்காலத்தில் கி. பி. 1370ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நகரச் சுவர், அளவில் மிக பெரிய, மிக சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டதாகும். அதன் முழு நீளம் 13.7 கிலோமீட்டராகும்.

நீயூயார்க் மராதன் போட்டி 7ந் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிறைவடைந்தது. புகழ் பெற்ற பிரிட்டிஷ் வீராங்கனை ராடெகலிவ் RADCLIFFE 2 மணி 23 நிமிடம் பத்து வினாடி என்ற சாதனையுடன் மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார். தென்னாப்பிரிக்க வீரர் ரமாலா 2 மணி 9 நிமிடம் 28 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து ஆடவர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

1  2