• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-15 08:46:13    
சியோல் நகரில் நடைபெற்ற மராதன் போட்டி

cri

ஜிம்நாஸ்திக்ஸ் 2004ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான ஜிம்நாஸ்திக்ஸ் போட்டியின் கடைசி சுற்று போட்டி 7ந் நாள் பெல்ஜியத்தில் முடிவுற்றது. சீன வீரர் வீராங்கனைகள் 2 தங்கம் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களைப் பெற்றனர். அவர்களில் சீன வீரர் சியோ சின்  9. 925 புள்ளிகள் என்ற சாதனையுடன் ஆடவருக்கான SIDE HORSE நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் பெற்றார். சீன வீராங்கனை லீ யா மகளிருக்கான சமநிலையற்ற கம்பிகள் நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

ஒலிம்பிக் பொருளாதாரம் மற்றும் நகர வளர்ச்சி ஒத்துழைப்பு பற்றிய முதலாவது கருத்தரங்கு 6ந் நாள் பெய்சிங்கில் துவங்கியது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு கல்வியியல் மற்றும் அறிவார்ந்த வள ஆதரவளிக்கும் வகையில், நகர பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விரைவுப்படுத்தி, செல்வாக்கை ஏற்படுத்துவது பற்றி, சீன வெளிநாட்டு நிபுணர்களும் அறிவாளர்களும் கூட்டாக ஆராய்ந்தனர்.

2005ஆம் ஆண்டை, சர்வதேச விளையாட்டு மற்றும் உடல் பயிற்சி ஆண்டாக ஐ. நா அண்மையில் அறிவித்துள்ளது. உடல் பயிற்சி மற்றும் விளையாட்டு மூலம் உடல் நலத்தை அதிகரித்து, கல்வி, வளர்ச்சி, சமாதானம் ஆகியவற்றை முன்னேற்றுவிப்பது என்பது அதன் நோக்கமாகும். உடல் பயிற்சி மற்றும் விளையாட்டானது, அனைத்துலகமும் புரியும் ஒரு மொழியாகும். இன மரபு, பின்னணி, மத நம்பிக்கை, பொருளாதார நிலை ஆகியவை வேறுபட்டதாக இருந்த போதிலும், உடல் பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் மக்கள் ஒன்றுப்பட முடியும் என்று அன்னான் கூறினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் திங்களில் ஏதென்ஸில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான செல்வு 700 கோடி யூரோ ஆகும். வரலாற்றில் மிக அதிகமாக செலவழித்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இதுவாகும். கிரேக்க அரசாங்கம் 7ந் நாள் இதை தெரிவித்தது. உள்ளூர் செய்தி ஊடகம் அறிவித்த படி, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 800 கோடி யூரோவை எட்டக் கூடும்.

இத்தாலியின் மிலான் நகரில் நிறைவடைந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விழாவில், முன்னேறிவரும் பெய்சிங் எனும் திரைப்படம் மிக சிறந்த திரைப்படம் என்ற பரிசை பெற்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்பு கமிட்டி பரிந்துரை செய்த இந்த திரைப்படத்தில், 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற பின், பெய்சிங் மாநகரம் மேற்கொண்டு முயற்சி, இந்நகரில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விழா ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். மொத்தம் 400க்கும் அதிகமான திரைப்படங்கள் இவ்வாண்டு திரைப்பட விழாவில் கலந்துகொண்டன.


1  2