• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-18 16:27:09    
காஷ் பிரதேசத்தின் வளர்ச்சி திசை

cri

சீனாவின் மேற்கு பிரதேசத்திலான பொருளாதாரம் பற்றி மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளும் சில நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய மற்றும் தென்னாசிய பொருளாதார துறையின் மையமாக வளர வல்ல காஷ் நகர் பற்றிய முதலாவது பகுதி முந்திய கட்டுரையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன் இரண்டாவது பகுதி இன்றைக்கு உங்களை சந்திக்க மகிழ்ச்சியடைகின்றோம். கட்டுரை மூலம் காஷ்யின் வளர்ச்சி திசை பற்றியும் வளர்வது பற்றிய சிந்தையும் அறிந்து கொள்வதில் உங்களுக்கு துணை புரியும் என நம்புகின்றோம்.
ஒரு புள்ளிவிபர முடிவு காஷியர் தமது வளர்ச்சி எதிர்காலத்தை கண்டறிய துணைபுரிந்துள்ளது. மத்திய மற்றும் தென் ஆசிய சந்தையில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான உற்பத்தி பொருட்கள் சீனத் தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை. இந்த உற்பத்தி பொருட்களைக் கடல் வழியாக ஏற்றிச் செல்ல குறைந்தது 24 நாளாகும். காஷ் வழியாக எல்லையை கடந்து ஏற்றிச் செல்ல சுமார் 10 நாளாகும். வழி குறைவு உற்பத்தி பொருகளின் செலவை மிகவும் குறைக்கலாம்.
இந்த காரணம், கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டின் பல தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து காஷில் அதன் அலுவல் துவக்கியுள்ளன. இவ்வாண்டு ஆக்ஸ்ட் திங்கள் 1ம் நாள் ஹாங்கானின் புதிய நூற்றாண்டு குழுமம் 12 கோடி ஹாங்கான் டாலர் முதலீடு செய்த சைன் நீர் நிகழ்ச்சி காஷ் பிரதேசத்தின் டாஷ்குர்கான் டாஜிக் தன்னாட்சி மாவட்டத்தில் கட்டியமைக்க துவக்கப்பட்டது. இவ்வாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சம் டன் எடையுள்ள பனிக்கட்டி நீர் மத்திய ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தைவான் காடியனா குழுமம் காஷ் பிரதேசத்தின் ஷாசெ, யியெசன் இரண்டு மாவடங்களில் பல கோடி யுவான் முதலீடு செய்வதன் மூலம் இரண்டு பழ பதனீட்டு தொழில் சாலைகளை கட்டியமைத்துள்ளது. மத்திய மற்றும் தென் ஆசிய சந்தைகள் உற்பத்தி பொருட்களின் இலக்காகும்.

1  2