காஷில் ஹைசின் கூட்டு நிறுவனம் அதன் முதலாவது கட்டத்தில் 3 கோடி யுவான் முதலீடு செய்து வண்ணி ற தொலை காட்சி பெட்டி உற்பத்தி நெறியை கட்டியமைத்துள்ளது. அதன் உற்பத்தி பொருள் அப்பிரதேசங்களின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிலைமையில் காஷ் தம் புத்தம் புதிய வளர்ச்சி சிந்தனையை முன்வைத்துள்ளது. அதாவது, இரண்டு உற்பத்தி தளங்களையும் ஒரு மையத்தையும் கட்டியமைப்பதாகும். வெளிநாட்டு வர்த்தக பதனீட்டு தளம், ஏற்றுமதி வணிக பொருட்களை குவிந்து வைக்கும் தளம் ஆகியவை இவ்விரண்டு தளங்களாக விளங்குகின்றன. மத்திய மற்றும் ஆசிய பொருளாதார துறையின் மையமாக காஷ் வளர வேண்டும். இந்த வளர்ச்சி சிந்தையை நனவாக்கும் வகையில் அவர்கள் 5 சக ஒன்று என்ற 3 நலன் பொது சமூகங்களை நிறுவியுள்ளது. அதவாவது, சுசியான கழிமுகப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுனாசான் நகர், சியான்மன் நகர், போஃசான் நகர், குவெய்சோ நகர், குவாஞ்சோ நகர் ஆகிய 5 நகரங்களுக்கும் காஷுக்குமிடையிலான நலன் பொது சமூகம், யாட்ஞ்சி ஆற்றின் கழிமுகப் பிரதேசத்திலுள்ள ஹாங்சோ நகர், நின்போ நகர், வென்சோ நகர், தைசோ நகர், யீவு நகர் ஆகிய 5 நகரங்களும் காஷும் இணைக்கும் நலன் பொது சமூகம், டியென்சின், சாந்து முதலிய நட்பார்ந்த மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஆற்றல் மிக்க பொருளாதாரத் துறையில் ஒன்றுக்கு ஒன்று நிரம்பும் தன்மை மிக்க, மத்திய மற்றும் தென் ஆசியாவை நோக்கி முன்னேறுவதில் ஆர்வும் கொண்ட 5 நகரங்களும் காஷும் இணைக்கும் நலன் பொது சமூகம் என்பன 5 சக 1 என்பதன் அம்சங்களாகும்.
மத்திய மற்றும் தென்னாசிய பொருளாதார மையத்தை உருவாக்குவதென்ற குறிக்கோள் முன்வைக்கப்பட்டவுடன் மக்களின் உணர்ச்சி இதனால் அணிதிரட்டப்பட்டது. செசியான குவாந்து ஆகிய மாநிலங்களின் அரசுகள் காஷ் மீதான புரிந்துணர்வை மாற்றுவது மட்டுமல்ல, காஷில் களஆய்வு மேற்கொள்ள தொழில் நிறுவனங்களை அனுப்பின. ஹாங்சோ கருத்தரங்கு நிறைவடைந்த பின் சான்சன் அரசு தயாரிப்பு துறையை சேர்ந்த 30க்கும் அதிகமானோர் இடம் பெறும் பார்வையிடும் குழு காஷ் சென்றது. சப்டெம்பர் திங்களின் துவக்கத்தில் வென்சோ தொழில் முனைவோரின் பிரதிநிதிகளும் காஷ் சென்றனர். காஷை மத்திய மற்றும் தென்னாசிய பொருளாதாரத் துறையின் மையமாக உருவாக்கும் மகோன்னத குறிக்கோள் 8 முதல் 10 ஆண்டுகளை பிடிக்க வேண்டும். ஆனால் காஷை பொறுத்தவரை, இது சமூகம் வளரும் இன்றியமையாத முன்னேற்ற போக்காகும். இனி காஷ் தாய்நாட்டின் மேற்கில் பொருளாதாரம் வளராத பிரதேசம் அல்ல. சீனாவின் மிகவும் விறுவிறுப்பான பொருளாதார வளர்ச்சி பிரதேசமாக மாறிவிடும். மேற்கு பகுதியை நெளிநாடுகளுக்கு திறந்து வைப்பதில் அதற்கு பதிலாக வகிக்காத பங்கை காஷ் வெளிக் கொணரும் என்று சீனக் கம்யூனிஸ் கட்சியின் காஸ் பிரதேசத்தின் கமிட்டியின் துணை செயலாளர் சி சுன் உறுதியாக கருத்து தெரிவித்துள்ளார். காஷ் பற்றி இரண்டு கட்டுரைகளில் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். அவற்றைப் படித்து காஸின் எதிர்காலத்தின் வளர்ச்சி பற்றி ஓரளவில் அறிந்து கொண்டுள்ளீர்கள் என நம்புகின்றோம். அது பற்றிய உங்கள் கருத்தை எழுதி எங்களுக்கு ஈமேல் அல்லது தொலை பேசி மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள். நன்றி. 1 2
|