• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-30 11:14:09    
Qinhuangdao பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிப்பிரதேசம்

cri

சீனாவிலுள்ள மிக பல அரசு நிலை பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிப்பிரதேசங்களில், Qinhuangdao பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிப்பிரதேசம், மக்களின் கவனத்தை அவ்வளவு ஈர்க்க வில்லை. இப்பிரதேசத்தின் கட்டுமான அளவு, அன்னிய முதலீட்டை ஈர்க்கும் தரம் மற்றும் நிலை, சூழலுக்கான கட்டுமானம் ஆகிவற்றில் இவ்வளர்ச்சி பிரதேசம் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது.

இவ்வளர்ச்சி பிரதேசத்தில் நுழைந்ததும், எல்லா திசைகளுக்கும் செல்லக்கூடிய விசாலமான பாதைகள், பச்சை பசேலென அருமையான சுற்றுச்சூழல் முதலில் காணப்படுகின்றன. அலுவலகக் கட்டடங்களும், தொழிற்சாலைகளும் ஒழுங்கான முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. சீனாவின் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களைத் தவிர, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் முதலிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த நாடு கடந்த கூட்டு நிறுவனங்கள் பல, ஒன்றன் பின் ஒன்றாக இங்கே வந்துள்ளன. தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புவியியல் அமைப்பு மேம்பாடு, சிறந்த முதலீட்டு சுற்றுச்சூழல் ஆகியவற்றால், இவ்வளர்ச்சி பிரதேசம் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளது.

1  2