ஹார்பின் இயக்கு ஆற்றல் முதலீட்டுப்பங்கு கூட்டு நிறுவனமானது, சீனாவில் மிக பெரிய மின்சார உற்பத்தி சாதன தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன், இத்தொழில் நிறுவனம், பெய்ஜிங் மாநகரத்திற்கு கிழக்கு பகுதியிலுள்ள பொ ஹா. வளை குடா பிரதேசத்தில் தனது துறைமுகத்தளத்தைக் கட்டியமைப்பதென முடிவு மேற்கொண்டது. இறுதியில், Qinhuangdao பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தது. ஹார்பின் இயக்கு ஆற்றல் கூட்டு நிறுவனத்தின் Qinhuangdao துறைமுகத்தளத்தின் நிர்வாகப் பகுதியின் பொறுப்பாளர் Xiao Zhen Hai இது பற்றி கூறியதாவது:
"Qinhuangdaoவின் புவியியல் அமைப்பானது, இத்துறைமுகத்தளத்தை கட்டியமைப்பதற்கு ஏற்றது. நிலத்தை உரிமையுடன் கேட்பது, குடிமாற்றம், கட்டுமானம் ஆகியவற்றில் எங்களுக்கு முன்னுரிமையுடன் கூடிய கொள்கைகள் பலவற்றை Qinhuangdao பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சிப் பிரதேசம் வழங்கியுள்ளது" என்றார் அவர்.
Qinhuangdao பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி பிரதேசம், சீனாவின் பொஹாய் கடலோரத்தில் அமைந்துள்ளது. பெய்ஜிங், Tianjin, Dalian, Shenyang, Yantai ஆகிய பொருளாதார பிரதேசங்கள் கூட்டாக உருவாக்கும் பொஹாய் வளை குடா சுற்று பொருளாதார மண்டலத்தின் மத்திய பிரதேசத்தில் இருக்கின்றது. நெடுஞ்சாலை மற்றும் இரும்புப்பாதை மூலம் இங்கிருந்து சீனாவின் பிற பிரதேசங்களுக்குச் செல்ல முடியும். கடல் மூலம் சீனாவின் கடலோர மற்றும் உலக பல்வேறு இடங்களின் துறைமுகங்களுக்குச் செல்ல முடியும். இதனால், இதன் புவியியல் நிலை தலைசிறந்தது. 1 2
|