அமெரிக்காவின் ADM கூட்டு நிறுவனமும் சிங்கப்பூர் Wilmarஉம் கூட்டாக முதலீடு செய்து, Qinhuangdaoயில் மூன்று பெரிய ரக பதனீட்டு தொழில் நிறுவனங்களை உருவாக்கியுள்ளன. இப்பிரதேசத்தின் தனிச்சிறப்பியற்பு வாய்ந்த நிலவியல் அமைப்பு மேம்பாட்டை அவை விரும்புவதால் இவ்வாறு செய்தன. தற்போது, இந்த இரண்டு கூட்டு நிறுவனங்களும் இங்கே முதலீடு செய்யும் மொத்த தொகை 15 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. Jinhai உணவு மற்றும் உணவு எண்ணெய் தொழிற்துறை கூட்டு நிறுவனமானது, மூன்று பதனீட்டு தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். அவரை எண்ணெய், அவரை ஆக்கப்பொருட்கள் ஆகியவற்றை அது முக்கியமாக பதனீடு செய்கின்றது. இக்கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் Mu Yan Kui செய்தியாளரிடம் எடுத்துக்கூறியதாவது:
"சீனாவின் வட கிழக்கு பகுதியானது, அவரை மிக அதிகமாக விளையும் பிரதேசமாகும். Qinhuangdaoஆனது, அவரையை வடக்கிழக்கு சீனாவிலிருந்து நாட்டின் இதர பிரதேசங்களுக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய வழியாகும். இதனால், இப்பிரதேசத்தில் பதனீட்டு ஆலையை உருவாக்குவது, அவரை விளையும் பிரதேசத்தைச் சார்ந்திருப்பது மட்டுமல்ல, அவரை ஆக்கப்பொருட்களை விற்பனை செய்யும் பிரதேசத்தை நோக்கி அமைய முடியும்" என்றார் அவர்.
தற்போது, அமெரிக்காவும் சிங்கப்பூரும் முதலீடு செய்த மூன்று தொழில் நிறுவனங்களின் ஆண்டு விற்பனை தொகை 700 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. தவிர, வளர்ச்சிப்பரதேசத்திலுள்ள 60 ஹெக்டர் நிலப்பரப்புடைய இடத்தைத் தானியங்களின் பதனீட்டுப் பணிக்குப் பயன்படுத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர். நிலவியல் அமைப்பு மேம்பாட்டைத் தவிர, சிறந்த முதலீட்டுச் சுற்றுச்சூழல், பொஹாய் வளை குடா சுற்று பொருளாதார மண்டலத்திலான தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பொருளாதார தகுநிலை ஆகியவை, வணிகர்களை ஈர்க்கும் முக்கிய காரணிகளாகும். எடுத்துக்காட்டாக, உலகிலுள்ள மிக பெரிய கண்ணாடி உற்பத்தி குழுமங்களில் ஒன்றான ஜப்பானிய Asahi Glass Co. Ltd Qinhuangdaoவில் தனி முதலீட்டு கூட்டு நிறுவனத்தை நிறுவியுள்ளது. மோட்டார் வாகனத்துக்கான முழு கோவை கண்ணாடியை இது முக்கியமாக உற்பத்தி செய்கின்றது. இக்கூட்டு நிறுவனத்தின் துணை பொது இயக்குநர் Sun Xiao Ping செய்தியாளரிடம் கூறியதாவது:
"அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனத்துக்கு Qinhuangdao வளர்ச்சிப்பிரதேசம் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. அன்னிய வணிகர்களின் முதலீட்டுக்கு சிறந்த சூழலையும் நிலைமையையும் உருவாக்கியுள்ளது" என்றார் அவர்.
1 2
|