இவ்வளர்ச்சிப் பிரதேசத்தில் முதலீடு செய்து தொழிற்சாலைகளை நிறுவியுள்ள சீன மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் பல உள்ளன. இவ்வளர்ச்சிப் பிரதேசத்தை பல முதலீட்டாளர் ஏற்றுக்கொள்வது என்பது, துவக்கம் முதல் வளர்ச்சிப்பிரதேசத்தின் கட்டுமானம் மீதான அளவுமயமாக்க நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட முடியாது என்று இவ்வளர்ச்சி பிரதேசத்தின் தலைவர் Hu Ying Jie தெரிவித்தார். துவக்கத்தில், சந்தை பொருளாதார மாதிரிக்கிணங்க இவ்வளர்ச்சி பிரதேசம் நிறுவப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளின் இடைக்காலம் முதல், அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானம், சுற்றுச்சூழலுக்கான கட்டுமானம், திட்டப்பணியை உட்புகுத்துவது ஆகியவை மீதான முறைமைமயமாக்க நிர்வாகத்தை இவ்வளர்ச்சிப்பிரதேசம் மேலும் வலுப்படுத்தி வருகின்றது. முதலீட்டாளரின் நலனை உத்தரவாதம் செய்யும் முன்நிபந்தனையில், இப்பிரதேசத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிப்பதாக திரு Hu தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"தொடரவல்ல வளர்ச்சி என்ற நெடுநோக்கு திட்டத்தில் ஊன்றி நிற்கும் முன்நிபந்தனையில், கடந்த சில ஆண்டுகளில், திட்டப்பணியை உட்புகுத்துவதன் தரத்தின் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். திட்டப்பணியின் அளவில் மட்டுமல்ல, அதன் வளர்ச்சி எதிர்காலத்திலும் கவனம் செலுத்துகின்றோம்." என்றார் அவர்.
சிறந்த நிர்வாகத்தினால், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில், இவ்வளர்ச்சி பிரதேசம் முக்கிய சாதனையை பெற்றுள்ளது. சூழல் பாதுகாப்பு பணியும் செவ்வனே செய்யப்பட்டுள்ளது. 1 2
|