• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-30 11:28:52    
சௌ சின் இசை நாடக நடிகை மௌ வெய் தௌ

cri

தென் கிழக்குச் சீனக் கடலோர மாநிலங்கள் சிலவற்றில், சௌ சின் இசை நாடகம் எனப்படும் பாரம்பரிய வட்டார இசை நாடகத்தை மக்கள் விரும்பிக் கண்டுகளிக்கின்றனர். இசை நாடகத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் மகளிரால் நடிக்கப்பெறுவது இவ்விசை நாடகத்தின் தனிச்சிறப்பியல்பாகும்.

இவ்விசை நாடகம் பற்றி மௌ வெய் தௌ கூறியதாவது—

"சௌ சின் இசை நாடகத்தின் வரலாறு மிகவும் குறுகியது. அது செச்சியாங் மாநிலத்தின் மிகச் சிறிய மலைப் பிரதேசமான சென் சியென் மாவட்டத்தில் தோன்றி கிராமப்புறங்களிலிருந்து மாநகரங்களுக்குப் பரவியுள்ளது. சுமார் நூறு ஆண்டு வரலாறுடைய சௌ சின் இசை நாடகம் தன்னிகரற்ற தனிச்சிறப்பியல்பு கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, மகளிர் சௌ சின் இசை நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அரங்கில் தோன்றும் ஆண் கதாபாதிரங்கள் அனைத்தையும் மகளிர் ஏற்று நடிக்கிறார்கள்" என்றார் அவர்.

1978ல் 16 வயதான மௌ வெய் தௌ சீனயர் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போது சௌ சின் இசை நாடகக் குழு நடிகையரைத் தேர்ந்தெடுப்பது பற்றிய செய்தியை அவருடைய சக மாணவி அறிவித்தார். ஒரு மருத்துவராக விரும்பிய மௌ வெய் தௌ உள்ளத்தில் ஒரு நடிகையாக விரும்பும் ஆவல் தோன்றியது. அதனால் அவர் பெயரைப் பதிவு செய்தார். இறுதியில், அவர் தேர்வில் வெற்றி பெற்றார்.

இசை நாடகக் குழுவில் சேர்ந்தார். நாடகத்தில் இளைஞர் என்ற கதா பாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. துவக்கத்தில் அவர் நடித்த இளைஞர் பாத்திரங்களில், கம்பீரம் குறைந்து காணப்பட்டது. இதற்காக மௌ வெய் தௌ பாடுபட்டு பயிர்சி மேற்கொண்டார். ஆசிரியர் நடித்துக் காண்பிப்பதை, கூர்ந்து கவனித்துக் கற்றுக்கொண்டார்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது பழமொழி. அது போல விடா முயற்சி, சௌ சின் இசை நாடகத்தின் மீதான தன்னிகரற்ற புரிந்துணர்வு ஆகியவற்றின் காரணமாக, அவர் விரைவில் புகழ் பெறலானார். அழகிய வேடம், இனிய பாடல் ஆகியவற்றில் அவர் சிறந்து விளங்குகிறார். 1984ல், 22 வயதான மௌ வெய் தௌ, சீன இசை நாடக வட்டாரத்தின் அதி உயர் விருதான மெய் மலர் பரிசைப் பெற்றார். இப்போது அவர் சீன இசை நாடகச் சங்கத்தின் துணைத் தலைவியாகவும் செச்சியாங் சியௌ பைய் ஹுவா சௌ சின் இசை நாடகக் குழுவின் துணைத் தலைவியாகவும் பணியாற்றுகிறார்.

1  2