• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-30 11:28:52    
சௌ சின் இசை நாடக நடிகை மௌ வெய் தௌ

cri

கடந்த 20 ஆண்டுகளில், இளைஞராக நடித்தாலும், நடைமுறை வாழ்க்கையில் அவர் ஒரு உண்மையான மகளிராக இருக்கிறார். அவர் கூறியதாவது—

"இளைஞராக நடித்தாலும் அலங்காரத்தை நான் மிகுதியும் விரும்புகிறேன். வாழ்க்கையில் நல்ல அலங்காரப் பொருட்களையும் தரமிக்க நறு மண பன்னீரையும் பயன்படுத்த விரும்புகிறேன். எனக்கு ஏற்ற ஆடைகளை உடுக்கவும் விரும்புகிறேன். பாரம்பரிய கலையில் ஈடுபட்டாலும், நவ நாகரிகமான வாழ்க்கையை நாடுகிறேன்" என்றார் அவர்.

சில ஆண்டுகளுக்கு முன் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அது முதற் கொண்டு ஓய்வு நேரத்தில் அவர் எப்போதும் தம் மகளுடன் இருப்பார். பிள்ளையைப் பெற்ற பின் கடை வீதியில் அலைந்து திரிவதும், காப்பி அகத்தில் காப்பி அருந்துவதும் குறைந்து விட்டது. பரபரப்பான வேலைக்குப் பின் அவர் அடிக்கடி தம் குடும்பத்தினருக்கு அறு சுவைமிக்க உணவை தயாரிப்பார். இதன் மூலம் வாழ்க்கையின் மற்றொரு இன்பத்தை அவர் அனுபவிக்கிறார். அவர் கூறியதாவது—

"சௌ சின் இசை நாடக கலையில் அதாவது அரங்கு கலையில் ஈடுபடுவது என்பது என் தொழிலாகும். இதைத் தேர்ந்தெடுத்தாலும் என் வாழ்வில் இப்பணியில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும். அதைச் சிறப்பாகவும் முழுமையாகவும் செய்ய வேண்டும். ஒரு முழுமையான எழில் மிக்க கலையை நான் நாட விரும்புகிறேன்" என்றார் அவர்.

மௌ வெய் தௌவை விரும்பும் விசுவாசமான ரசிகர் பலர் உள்ளனர். அவரது நடிப்பை வெகுவாக நேசிக்கின்றனர். அவர்களில் ஒருவரான லியூ தியன் என்பவர் கூறியதாவது—

"மௌ வெய் தௌவின் நடிப்பு, உயிர்த் துடிப்புடமிக்கது. அதற்குத் தனிச்சிறப்பியல்பு உண்டு. அவருடைய பாடல் உறுதியானது. அதே வேளையில் மென்மையானது. மிகவும் இயற்கையானது. அவர் தலைசிறந்து விளங்கிறார் என்பதில் ஐயமில்லை" என்றார் அவர்.

தற்போது, சீனாவின் பல்வேறு இடங்களிலும் மௌ வெய் தௌவின் ரசிகர்கள் பரவி வருகின்றனர். வெளி நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். பல ரசிகர்கள் அவருடைய அரங்கேற்றம் ஒவ்வொன்றையும் கண்டுமகிழத் தவறுவதில்லை. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சில ரசிகர் அரங்கேற்றத்துக்குப் பின் அவருக்கு மலர்ச் செண்டு வழங்குவதுண்டு. இந்த ரசிகர்கள் தான், தமது கலைப் பாதையில் இடைவிடாமல் முன்னேற்றுவதற்து ஊக்கமளிக்கின்றனர் என்று மௌ வெய் தௌ கூறினார்.


1  2