• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-02 13:35:08    
இலவச ரத்த தானம் செய்வதிலுள்ள சீனர்

cri

இவ்வாண்டு 50 வயதை அடைந்த திரு கோ யுன் குவா சீனாவின் தென்கிழக்கு மாநிலமான புஃசியன் மாநிலத்தின் புஃசோ நகரைச் சேர்ந்த விவசாயி. கடந்த 10 ஆண்டுகளில் அவர் பல முறை இலவச ரத்த தானம் செய்யும் நடவடிக்கையில் கலந்து கொண்டார். அவர் ரத்த தானம் செய்த அளவு 30 ஆயிரம் மின்னி மீட்டராகும். இது மட்டுமல்ல அவர் மிதி வண்டி மூலம் சீனாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இலவச ரத்த தானம் செய்வது பற்றி பிரச்சாரம் செய்துள்ளார். அவர்தம் தலைமையில் அவர் சென்ற இடங்களில் ரத்த தானம் செய்யும் பணி பயன் பெற்றுள்ளது. அவர் சீன நலவாழ்வு அமைச்சகத்தால் பாராட்டப்பட்டுள்ளார். அண்மையில் பெய்சிங்கில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய போது அவர் உரையாற்றினார். ரத்த தானம் செய்வது என்பது சமூகத்தில் அன்பு தெரிவிக்கும் நடவடிக்கையாகும். தனிநபர் மட்டும் ரத்த தானம் செய்தால் சமூகத்தின் தேவையை நிறைவேற்ற முடியாது. ஆகவே நான் மிதி வண்டி மூலம் ரத்த தானம் செய்யும் அதேவேளையில் இலவச ரத்த தானம் செய்வது பற்றிய அறிவை பிரச்சாரம் செய்கின்றேன். என்னுடைய அனுபவத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் அறிவியல் முறையில் ரத்த தானம் செய்வது உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. சுய விருப்பத்துடன் இலவச ரத்த தானம் செய்யும் அணியில் சேர்மாறு மக்களை அணித்திரட்டியுள்ளேன் என்றார் அவர்.

திரு கோ போன்ற உதாரணங்கள் பல சீனாவில் உள்ளன. எடுத்துக்காட்டாக குவாந்து மாநிலத்தின் சன்சுன் நகரில் 600க்கும் அதிகமான நகரவாசிகள் சுய முயற்சியுடன் ரத்த தானம் செய்யும் தொண்டர் சேவை அணியை நிறுவியுள்ளனர். அவர்கள் ரத்த தானம் செய்யும் அதேவேளையில் ரத்த தானம் செய்யும் நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர்கள் நண்பர்களை அவர்கள் அணித்திரட்டியுள்ளனர். சீனாவின் ஹுநான் மாநிலத்தின் சிறப்பு தொழில் பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள் இலவச ரத்த தானம் செய்யும் சங்கத்தை நிறுவி இது தொடர்பான அறிவை உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்கள் மொத்தமாக 2600க்கு அதிகமானோரை அணித்திரட்டினர்.
1  2