• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-02 13:35:08    
இலவச ரத்த தானம் செய்வதிலுள்ள சீனர்

cri

சீனாவின் அனைத்து மாநிலங்களில் ஹூநான் மாநிலம் இலவச ரத்த தானம் செய்வதை பரவல் செய்வது என்பது சமூகத்தின் பல்வேறு வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் என்ன, முன்பு இந்த மாநிலத்தில் பல விவசாயிகள் ரத்தம் விற்பனை செய்ததினால் எய்ட்ஸ் நோய் தொற்றிவிட்டனர். தற்போது ஹுநான் மாநிலத்தின் ரத்த தானம் செய்யும் பணி நிலைமை பற்றி இம்மாநிலத்தின் துணை தலைவர் வான் சுமெய் அம்மையார் அறிமுகப்படுத்துகின்றார். சீனாவில் இலவச ரத்த தானம் செய்யும் அமைப்பு முறை நிறுவப்பட்ட பின் ஹுநான் மாநில அரசு உருப்படியான நடைமுறையாக்க வழிமுறைகளை வகுத்துள்ளது. இலவச ரத்த தானம் செய்யும் நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறு போதியளவில் மாநில வாசிகளை அணித்திரட்டியுள்ளது. ரத்தம் விற்பனை செய்வதென்ற நிலைமை ஹுநான் மாநிலத்தில் முழுமையாக மலை ஏறிவிட்டது என்றார் அவர்

ஹாநான் மாநிலம் இலவச ரத்த தானம் செய்யும் அமைப்பு முறை உறுதியாக நிறுவியுள்ளது. தற்போது மாநிலத்தில் சிகிச்சைக்கு தேவையான ரத்தம் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக இலவச ரத்த தானம் செய்வதன் மூலம் கிடைத்த ரத்தமாகும். பாதுகாப்பான கவலையற்ற ரத்தத்தை மக்கள் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

சீன மக்களிடையில் இலவச ரத்த தானம் செய்வது பற்றி அறிந்து கொண்ட புரிந்துணர்வு பெரிதும் அதிகரித்துள்ள போதிலும் தற்போது சீனாவின் சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தில் இன்னும் 15 விழுக்காட்டு ரத்தம் விலையில் பெற்ப்பட்டுள்ளது. அத்துடன் சில கிராமப்புறத்தில் மக்கள் இலவச ரத்த தானம் செய்வது பற்றி அறிவை குறைவாக கொண்டுள்ளனர். எதிர்காலத்துக்கான சீனாவின் குறிக்கோள் முழுமையாக இலவச ரத்த தானம் செய்வதை மயமாக்க வேண்டும் என்பதாகும் என்று சீன செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பென் பையுன் தெரிவித்துள்ளார். சீனாவின் தொட்ர்புடைய வாரியங்கள் இலவச ரத்த தானம் செய்யும் பணியை ஆட்டமசைவின்றி உற்சாகத்துடன் முன்னேற்றுவிக்கும். சில ஆண்டுகளுக்குள் நாடு முழுவதில் சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை இலவச ரத்த தானம் செய்வதிலிருந்து பெற பாடுபடும். ரத்தம் எடுப்பதிலிருந்து எய்ட்ஸ் நோயைக் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் சீன அரசு பல்வேறு இடங்களின் அரசாங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இலவச ரத்த தானம் செய்வதற்காக சிறந்த பணி சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும். செய்தி ஊடகத்தின் மூலம் பிரச்சாரம் செய்து பொது நன்மை வாய்ந்த விளம்பரத்தை பிரச்சாரம் செய்ய வேண்டும். ரத்தம் எடுக்கும் வண்டி உள்ளிட்ட வசதியை பொருத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சீன அரசு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இளம் தலைமுறையினர் இலவச ரத்த தானம் செய்வது பற்றி அறிந்து கொண்ட புரிந்துணர்வை உயர்த்தும் வகையில் ரத்த தானம் செய்வதை இடைநிலை மற்றும் உயர் நிலை கல்வி நிலையங்களின் பாட நூல் திட்டத்தில் சேர்ப்பதையும் சீனக் கல்வி அமைச்சகம் கருத்தில் கொண்டு இருக்கின்றது.


1  2