• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-06 18:56:52    
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரும் அரசு தலைவருமான ஹு சிந்தாவ் டிசம்பர் முதல் நாள் சீன இராணுவ விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவினரைச் சந்தித்துரையாடினார். 52வது சர்வதேச இராணுவ விளையாட்டு சாம்பியன் பட்டப் போட்டியில் அவர்கள் சிறந்த சாதனை பெற்றதற்கு ஹு சிந்தாவ் வாழ்த்து தெரிவித்தார். இராணுவ விளையாட்டுப் வீரர்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டு பயிற்சி செய்து சீனாவுக்கு மேலும் பெருமை பெற பாடுபட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். நவம்பர் திங்களின் நடுவில் நடைபெற்ற இந்த போட்டியில் சீனா இராணுவ விளையாட்டுப் பிரதிநிதிகள் குழு மொத்தம் 6 நிகழ்ச்சிகளில் 5 தங்கப் பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் போட்டிக்கான மங்களச் பொருள் பற்றிய உருவரைவுப் போட்டி டிசம்பர் முதல் நாள் நிறைவடைந்தது. இதுவரை மொத்தம் 600க்கும் அதிகமான உருவரைவுப் படங்களை இப்போட்டிக்கான அலுவலகம் பெற்றுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு கமிட்டி இந்த போட்டியின் அடிப்படையில் 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் போட்டிக்கான மங்களச் பொருட்களை உறுதிப்படுத்தும்.

நவம்பர் 28ந் நாள் 2004ஆம் ஆண்டு உலக நடனப் பாணி பனிச்சறுக்கல் போட்டியின் ரஷிய சுற்றுப் போட்டியில் சீன வீராங்கனைகளான சாங் தான், சாங் ஹௌ ஜோடி மகளிருக்கான இரட்டையர் பனிச்சறுக்கலில் சாம்பியன் பட்டம் பெற்றனர். ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர் சாங் மின் மூன்றாம் இடம் பெற்றார். நவம்பர் 28ந் நாள் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான குறுகிய தூர விரைவு பனிச்சறுக்கல் போட்டியின் அமெரிக்க சுற்றுப் போட்டியில் சீன வீரர் வீராங்கனைகள் மேலும் இரண்டு தங்கப் பதக்கம் பெற்றனர். இவ்வாறு, 3 நாட்கள் நீடித்த இப்போட்டியில் சீன வீரர் மொத்தம் 4 தங்கப் பதக்கம் வென்றனர். உலகக் கோப்பைக்கான குறுகிய தூர நீச்சல் போட்டியின் இரண்டாம் சுற்றுப் போட்டி நவம்பர் 28ந் நாள் ஆஸ்திரேலியாவின் மொல்பெனில் நிறைவடைந்தது. மகளிருக்கான 50 மீட்டர் முதுகுப்புறப் பாணி நீச்சல் போட்டியில் சீன வீராங்கனை கௌ சாங் தங்கப் பதக்கம் பெற்றார். இப்போட்டியில் சீன அணி மொத்தம் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களை வென்றது.

1  2