• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-06 18:56:52    
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

நவம்பர் 27ந் நாள் பங்காக்கில் நடைபெற்ற உலக இளம் மகளிர் கால் பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மன் அணியிடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பெற்றது. ஜெர்மனி முதலிடம் பெற்றது. அமெரிக்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடம் பெற்றது.

27 பேர் இடம்பெறும் சீன இளைஞர் கால் பந்து அணி டிசம்பர் 8ந் நாள் ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் செல்லும். ஜெர்மனியின் தென் பகுதியிலுள்ள BAD KISSINGEN நகரில் இரண்டு ஆண்டு பயிற்சியில் அவர்கள் ஈடுபடுவர். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கால் பந்துபோட்டியில் கலந்து கொள்ள இந்த அணி நிறுவப்பட்டுள்ளது. இந்த 27 பேரும் 1985-1989 ஆண்டுகளில் பிறந்த இளம் கால் பந்து ஆட்டக்காரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 35 ஆண்டுகால பணி அனுபவமுடைய ஜெர்மனியர் கிரோசன் அவர்களுக்கு பயிற்சியளிப்பார்.

சீனாவின் சிங்தௌ நகரில் நடைபெற்ற சர்வதேச ஜூதோ ஒப்பன் போட்டி நவம்பர் திங்கள் 28ந் நாள் நிறைவடைந்தது. இப்போட்டியில் சீன அணி மொத்தம் 6 தங்கப் பதக்கம் பெற்றது. ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், சீன ஹாங்காங் உள்ளிட்ட 18 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 154 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

 2004ஆம் ஆண்டு சர்வதேச சீன பாணி மற்போர் அழைப்புப் போட்டி டிசம்பர் 17ந் நாள் முதல் 19ந் நாள் வரை சீனாவின் தியன்சின் நகரில் நடைபெறும். இது வரை 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வர்.

நவம்பர் 28ந் நாள் நடைபெற்ற 2004ஆம் ஆண்டு இணைப்புக் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியின் மகளிர் போட்டியில் ரஷிய அணி 3-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.


1  2