பல ஆண்டுகளாக, ஹுவா சி கிராமத்தின் பொருளாதாரம் ஆண்டுக்கு 20 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வந்துள்ளது. குறைவான பங்கீடு, கூடுதலான சேமிப்பு என்ற கொள்கையானது, உயர் வேக அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். கிராமவாசிகள் மூன்றில் ஒரு பகுதி ஊதியத்தை மட்டும் அன்றாட நூகர்வுக்குச் செலவழிக்கின்றனர். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், எஞ்சிய ஊதியத்தையும் போனஸையும் பங்கு முதலீடாக அவற்றில் முதலீடு செய்கின்றனர். சுய சேமிப்பு முறை மூலம், இக்கிராமத்தின் பொருளாதாரம் மேன்மேலும் வலுப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாக உள்ளது.
தற்போது ஹுவா சி கிராமவாசிகளின் வருமானம் அதிகம் என்று செய்தியாளரிடம் வூ அம்மையார் கூறினார்.
"3 வகை பங்கீட்டு வழிமுறைகளை ஹுவா சி கிராமவாசிகள் மேற்கொள்கிறார்கள். ஒன்று, சோஷலிச ரீதியில் அதிக உழைப்புக்கு அதிக வருமானம். இரண்டு, கிராமவாசிகள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு உணவு தானியத்துக்கென 2800 யுவான் பெறலாம். மூன்று, பங்கு முதலீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதால், ஆண்டின் இறுதியில் மிகையூதியம் பெறலாம்" என்றார் அவர்.
1 2 3
|