ஹுவா சி கிராமத்தில் சேர்ந்த கிராமவாசிகளில் பெருங்பாலோர் புதிய வீட்டில் தங்கி வாழ்கின்றனர். இளைஞர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். முதியோர் திங்களுக்கு முது வயது pension பெறுகின்றனர். ஹுவா சி கிராமத்தில் சேர்ந்த பின், மிக வறுமையான கிராமவாசியின் குடும்பத்திலும் கூட 80 ஆயிரம் யுவான் மதிப்புள்ள சொத்து உள்ளது.
முதியோரை மதித்து, குழந்தையை நேசிப்பது, ஆசிரியரை மதித்து, கல்வியில் முக்கிய கவனம் செலுத்துவது ஆகிய பாரம்பரிய நல்லொழுக்கத்தை வளமடைந்த நவீனமயமான ஹுவா சி கிராமம் பெருமளவில் ஊக்குவிக்கிறது. ஆகவே, இக்கிராமத்தின் விசாலமான வீதியிலும், முழுமையான நவீன வசதிகள் கொண்ட குடியிருப்பு வீட்டிலும், சிறந்த சமூக சூழ்நிலையை நீங்கள் உணர முடியும்.
"இன்பம் என்றால் என்ன? வளமிக்க வாழ்க்கை, மகிழ்ச்சியுடன் கூடிய மனநிலை, உடல் நலம் ஆகிய 3 வரையறைகள் எங்களுக்கு உண்டு. அழகான ஹுவா சி கிராமம், இன்பமான ஹுவா சி கிராமவாசிகள் ஆகியவற்றால், ஹுவா சி கிராமத்துக்கு சீனாவில் முதலாவது கிராமம் என்ற பெயர் சூட்டப்பட்டது" என்றார் வூ ரென் பாவ். 1 2 3
|