தற்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கு காரும் சேமிப்பு தொகையும் உண்டு. குறைந்தது பத்து லட்சம் யுவான் மதிப்புள்ள சொத்துக்களை அவை கொண்டிருக்கின்றன. சொத்து மிகக் குறைவான குடும்பத்துக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட ரென்மின்பி யுவான் உண்டு.
வளர்ச்சி என்ற கருத்தை வளமடைந்த ஹுவா சி கிராமம் மற்ற கிராமங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது வரை சில நூறு பயிற்சி வகுப்புகளை அது நடத்தி, தொழில் நடத்தும் அனுபவம் பலவற்றை 10 ஆயிரம் கிராம தலைவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அவர்களின் தலைமையில், ஒரு லட்சம் விவசாயிகள் வறுமையிலிருந்து விடுபட்டு, வளம் அடைந்துள்ளனர். அருகிலுள்ள கிராமங்களின் வளர்ச்சிக்கு நேரடி உதவி அளிக்கும் பொருட்டு, அவற்றுடன் இணைந்து பெரிய ஹுவா சி கிராமத்தை உருவாக்குவது என்பது, ஹு சி கிராமத்தின் மிகப் பெரிய நடவடிக்கையாகும். வாங் லி எனும் அம்மையார் இந்நிலைமையை எடுத்துரைத்தார். அவர் கூறியதாவது—
"2001ஆம் ஆண்டுக்குப் பின், 14 அண்டை கிராமங்களை ஹுவா சி கிராமத்தில் சேர்த்துள்ளோம். இதற்குப் பின், மக்களின் குடியிருப்பு வீடு பிரச்சினையை முதலில் தீர்க்கிறோம். 3 லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய குடியிருப்பு பிரதேசம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பெரிய ஹு சி கிராமத்தின் நிலப்பரப்பு, 26 சதுர கிலோமீட்டராகும்" என்றார் அவர்.
1 2 3
|