• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-15 20:23:10    
தாலி காட்சித் தலம்

cri

யுன்னான் மாநிலத்தின் தலைநகரான குன்மிங் நகரின் மேற்குப் பகுதியில் தாலி அமைந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. பெய், ஹன், யி, வெய் உள்ளிட்ட 13 தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்துவருகின்றனர். பல்வேறு தேசிய இன மக்கள் இணக்கமாக வாழ்க்கை நடத்துகின்றனர். இவ்விடத்தில் முழு ஆண்டிலும் உறைபனி காணப்படு. கம்பீரமான சான்சான் மலை, தூய்மையான ழஹெய் ஏரி, வண்ணத்துப் பூச்சி என்னும் ஊற்று,(அதற்குக் காதல் கதை உண்டு), உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்ற புராதன தாலி நகரம் ஆகியவை இவ்விடத்தில் உள்ளன. தாலிக்குரிய மனிதப் பண்பாட்டு மற்றும் இயற்கைக் காட்சியினால், அதற்குரிய தனிச்சிறப்பியல்பு உருவாயிற்று.

பிரபல காட்சித் தலமான சான்சான் மலையின் அடிவாரத்தில் பளிங்கு நீரைக் கொண்ட ழஹய் ஏரி அமைந்துள்ளது. இவ்வேரியின் காரணமாக, தாலியில் தூய்மையான ஈரமான காற்று வீசுகின்றது. ழஹய் ஏரியும் சான்சான் மலையும் எழில் மிக்க தாலி காட்சியை உருவாக்கியுள்ளன.

1  2  3