
கடந்த 2 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தாலி அரசு அதிக பணி மேற்கொண்டுள்ளது என்று தாலி சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹயிசுவன் கூறினார். ழஹய் ஏரியைப் பாதுகாக்கும் பொருட்டு, இவ்வேரியில் போய்வரும் சுற்றுலா படகுகளின் எண்ணிக்கையை அரசு கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்துகின்றது. அதாவது, அது 5ஐத் தாண்டக் கூடாது. மீன் பிடிப்பு, இவ்வேரியின் உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதால், இது குறித்து, மீன் பிடி தடுப்புக் காலம் வகுக்கப்பட்டுள்ளது. சில மீன் பிடி கருவிகள் பயன்படுத்தபடக் கூடாது என்றும் அரசு கட்டளையிட்டுள்ளது என்றார் அவர்.

பயணிகள், படகில், ழஹய் ஏரியின் எழில் மிக்க இயற்கை காட்சியையும் விருந்தோம்பல் மிக்க பெய் இன நங்கை, பயணிகளுக்கென ஆடும் 3 சுவை தேநீர் தயாரிப்பு நடனத்தையும் கண்டுகளிக்கலாம். 1 2 3
|