• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-13 17:32:31    
கடந்த வாரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

23வது மகௌ சர்வதேச மராதன் ஓட்டப் போட்டி 5ஆம் நாள் நடைபெற்றது. சீனா, சீன ஹாங்காங், சீன மகௌ, வட கொரியா, போர்த்துக்கல், மொராக்கோ உள்ளிட்ட 28 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஈராயிரத்து 600க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். சீன வீராங்கனை 2 மணி, 37 நிமிடம் 27 வினாடி என்ற சாதனையுடன் மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

2004ஆம் ஆண்டு உலக இளைஞர் மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி டிசம்பர் 5ந் நாள் ஜப்பானில் நிறைவடைந்தது. சீன வீரர் வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடினார். சீன அணி, ஆடவர் குழு போட்டி, மகளிர் குழு போட்டி, ஆடவர் ஒற்றையர் போட்டி, மகளிர் ஒற்றையர் போட்டி, மகளிர் இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய 6 போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. ஜப்பானிய அணி ஆடவர் இரட்டையர் போட்டியில் மட்டும் சாம்பியன் பட்டம் பெற்றது.

2004ஆம் ஆண்டுக்கான ஹாங்காங் கோல்பு ஒப்பன் போட்டி 5 ந் நாள் நிறைவடைந்தது. நான்கு நாள் போட்டி மூலம், ஸ்பெனிஷ் வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார். சீனாவின் வீரர் சாங் லியன் வேய் எட்டாம் இடம் பெற்றார்.

டென்னிஸ் 2004ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி ஸ்பெயினில் நிறைவடைந்தது. ஸ்பெயினின் வீரர் மொயா 3-0 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ரோடிகைத் தோற்கடித்தார். இவ்வாறு ஸ்பெனிஷ் அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க அணியைத் தோற்கடித்து வரலாற்றில் இரண்டாம் முறையாக டேவிஸ் கோப்பையை வென்றது.

அமெரிக்க புகழ்பெற்ற குறுகிய தூர ஓட்ட வீராங்கனையான MARION JONES தாம் வழங்கிய ஊக்க மருந்தை பயன்படுத்தியிந்ததாக அமெரிக்க பால்கோ கூட்டு நிறுவனத்தை சேர்ந்த VICTOR CONTE அமெரிக்க CNNக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முன்னதாக, THG என்ற ஊக்க மருந்தை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யபட்டிருந்தார். பின்னர் அவர் உத்தரவாதம் அளித்து விடுவிக்கப்பட்டார்.

2004-2005 ஆண்டு அனைத்து சீன உறைப்பனிச் சறுக்கல் போட்டி 5ஆம் நாள் ஹெலுங்கியாங் மாநிலத்தில் நிறைவடைந்தது மொத்தம் 60 பேர் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இறுதியில், சென் சிங் சன் 44.78 வினாடியில் உயர்மலை பெரும் சுற்றுவட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். லீ யே 52.27 வினாடியில் மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார்.


1  2